கேரளாவில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையத்திலும் ரெப்பிட் டெஸ்ட் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது
கேரளாவில் உள்ள விமான நிலையங்களில் Rapid Test வசதி நடைமுறைக்கு வந்துள்ளது
கேரளா மாநிலத்தில் உள்ள நான்கு விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளுக்கான விரைவான பி.சி.ஆர் பரிசோதனை(Rapid Test) வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. விரைவான பி.சி.ஆர் பரிசோதனை ஐக்கிய அரபு எமிரேட் பயணிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தில் விமான நிலையங்களில் இதற்காக வசதிகள் ஏற்படுத்தும் வேலைகள் துரிதமாக முடிக்கப்பட்டது. திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் விமான நிலையங்களில் மைக்ரோ ஹெல்த் ஆய்வகத்தால் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் விரைவான பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நிலையில், பரிசோதனை முடித்து அரை மணி நேரத்திற்குள் முடிவைப் பெறக்கூடிய வகையில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை கொச்சி விமான நிலையத்தில் சம்பூர் ஆய்வகத்தால் இதற்கான சேவைகள் வழங்கபடுகிறது. 200 பேருக்கு இங்கு ஒரேநேரத்தில் பரிசோதனை செய்ய முடியும்.