குவைத்தில் நுழைய வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை இன்று இரவுடன் முடிவடையும்
Image: KuwaitCity
குவைத்தில் நுழைய வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்றுடன் முடிகிறது
குவைத்தில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக 280,000 வெளிநாட்டினர் தாய்நாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இதில் அரபு நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்ற தகவலை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இதில் கோவிட் வருவதற்கு முன்பு நாட்டிற்கு விடுமுறையில் சென்றவர்களும், கோவிட் காலத்தில் வெவ்வேறு நேரங்களில் தாயகம் திரும்பியவர்களும் அடங்குவர். இதேபோல் சரியான நேரத்தில் தங்களின் விசாக்கள் புதுப்பிக்கப்படாததால் சுமார் 2.5 லட்சம் வெளிநாட்டினரின் குடியிருப்பு அனுமதி பத்திரங்கள் காலாவதியாகிவிட்டதாக வீட்டுவசதித் துறையை மேற்கோள் காட்டியும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் குவைத் திரும்ப முடியாதவர்கள் தங்கள் இகாமாவை ஆன்லைனில் புதுப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே வெளிநாட்டவர்கள் குவைத்தில் நுழைய விதிக்கப்பட்ட பயணத்தடை இன்று(31/07/21) இரவோடு முடிவடைகிறது. இதன் காரணமாக குவைத் சுகாதரத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் அதற்கான சான்றிதழை குவைத் சுகாதரத்துறை வெளியிட்டுள்ள தளத்தில் பதிவு செய்து அதிகாரிகள் ஒப்புதல் அளித்தால் நாளை ஆகஸ்ட்-1,2021 முதல் கிழே குறிப்பிட்டுள்ள புதிய பயண நிபந்தனைகளை பின்பற்றி குவைத்தில் நுழைய முடியும்.
அதில் முக்கியமான ஒன்று செல்லுபடியாகும் Validity Visa மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்துக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட PCR பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் ஆகியவற்றுடன் நுழைய முடியும், குவைத்தில் நுழைந்த வெளிநாட்டவர்கள் ஏழு நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். இதற்கிடையே சில தினங்களுக்கு பிறகு மற்றொரு பிசிஆர் பரிசோதனை செய்து எதிர்மறையாக இருந்தால், தனிமைப்படுத்தலை முடித்து கொள்ள முடியும். இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து நேரடியான விமான சேவைகள் துவங்குவது மேலும் தாமதம் ஆகும் என்பதால் மூன்றாவது நாடு வழியாக Connection விமானங்கள் மூலம் 14 நாட்கள் அந்த நாடுகளில் Quarantine இருக்காமல் குவைத்தில் நுழைய முடியும் என்று குவைத் விமான நிலையத்தின் இயக்குனர் யூசுப் அல் ஃபவுஸன் அவர்கள் தெரிவித்துள்ளார்.