குவைத்தில் போலியாக தடுப்பூசி சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கிய இந்தியாவைச் சேர்ந்த செவிலியர் உட்பட 3 கைது செய்யப்பட்டனர்
Image : Kuwait Police
குவைத்தில் போலியாக தடுப்பூசி சான்றிதழ்கள் விற்பனை செவிலியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
குவைத்தில் போலியாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிபடையில்,இந்த வழக்கை குற்றவியல் பிரிவு அதாகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக விசாரித்தனர். பின்னர் சான்றிதழ்கள் எங்கிருந்து வழங்கப்படுகிறது என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து குவைத்தின் Al-Jahra மருத்துவமனையில் வேலை செய்கின்ற 3 செவிலியர்களை ஆதாரங்களுடன் அதிகாரிகள் கைது செய்தனர். இதில் இரண்டு எகிப்து நாட்டு செவிலியர்கள் மற்றும் ஒரு இந்தியாவை சேர்ந்த செவிலியர் உட்பட 3 பேர் சிக்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கொண்டு கைது செய்யப்பட்ட செவிலியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக இதை செய்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 250 தினார் முதல் 300 தினார் வரையில் இதற்கு லஞ்சமாக பெற்றுள்ளனர். பிறகு தடுப்பூசி எடுக்காத சம்பந்தப்பட்ட நபருக்கு சான்றிதழ் அடங்கிய Link-ஐ குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு தடுப்பூசி எடுக்காமல் போலியாக சான்றிதழ்களை பெற்றுகொண்ட நபர்களை கண்டறியவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதாகாரிகள் தெளிவுபடுத்தினர். இதற்கிடைய செவிலியர்கள் 3 பேரின் கைது நடவடிக்கை தொடர்பான செய்தியை குவைத் சுகாதாரதுறை அமைச்சகமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.