குவைத்தில் நுழைய காத்திருக்கும் வெளிநாட்டினரின் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
குவைத் சுகாதாரதுறை சிறப்பு குழுவால் வெளிநாட்டினரின் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
குவைத்தில் வருகின்ற ஆக்ஸ்டு-1,2021 முதல் நிபந்தனைகளுடன் வெளிநாட்டினர் நுழைய அனுமதி வழங்க குவைத் அமைச்சரவை முடிவு செய்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் அதற்கான சான்றிதழ் பதிவேற்றி குவைத் சுகாதரத்துறையின் அனுமதி பெறுவதற்காக இணையதளம் ஒன்றை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. இந்த தளத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர் தங்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவை பதிவேற்ற(Upload) வேண்டும்.
இந்நிலையில் இந்த தளத்தில் வெளிநாடுகளில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டினர், குடிமக்கள் உள்ளிட்ட 50,000 ற்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றி உள்ளதாகவும், இதில் 12,000 ற்கும் மேற்பட்ட நபர்களின் சான்றிதழ்கள் அதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவினர் பரிசோதனை செய்து முடித்துள்ளனர் எனவும் சம்பந்தப்பட்ட துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது. இதில் பலரது சான்றிதழ்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாவும். இதற்காக காரணங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டது தொடர்பான தகவல்களில் உள்ள தெளிவில்லாத தன்மையும் மற்றும் சான்றிதழில் Bar-Code இல்லாதது உள்ளிட்ட காரணங்களாக அமைகின்றன என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது சுகாதரத்துறை வெளியிட்டுள்ள தளத்தில் தனிநபர் விபரங்கள் மற்றும் Upload செய்யபடும் சான்றிதழ் உள்ளிட்டவை 3 வேலை நாட்களுக்குள் Cross Check செய்து அங்கிகாரம் வழங்கபடும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. சான்றிதழ் பதிவேற்ற வேண்டிய இணையதள Link: https://vaxcert.moh.gov.kw/SPCMS/PH/CVD_19_Vaccine_External_Registration.aspx. . இதற்கிடையே இந்தியர்களுக்கு மத்தியில் நிலவிவந்த குழப்பங்களுக்கு தீர்வாக இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் குவைத்தில் நுழைவதில் பிரச்சனை இருக்காது என்று குவைத் இந்திய தூதர் விளக்கமளித்துள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.