இந்தியாவிலிருந்து இந்த இரண்டு எமிரேட்ஸுக்கு வருபவர்களுக்கு 10 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Image credit: Air India Express
இந்தியாவிலிருந்து Abu Dhabi மற்றும் Ras Al-Khaimah வருபவர்களுக்கு 10 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல் கட்டாயம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவிலிருந்து இருந்து இன்று(05/08/21) காலை முதல் புதிய பயண விதிமுறைகள் பின்பற்றி அமீரகத்திற்கு பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அமீரகத்தின் அபுதாபி மற்றும் ராஸ்-அல்-கைமா ஆகிய இரண்டு எமிரேட்ஸுக்கு வருபவர்களுக்கு 10 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தல் கட்டாயம் என்று டிராவல் ஏஜெண்டுகளுக்கு ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று(05/08/21) வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு விமான நிலையங்களில் இறங்கும் பயணிகள் தனிமைப்படுத்தல் காலத்தில் கண்காணிப்பு உபகரணங்களை(Tracking Watches) அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் PCR பரிசோதனைகளை செய்ய வேண்டும்.
அதுபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்யின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் ((GCAA)) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையிலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து அபுதாபி மற்றும் ராஸ்-அல்-கைமா வரும் பயணிகளுக்கு 10 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் துபாய்,ஷார்ஜா உள்ளிட்ட மற்ற எமிரேட்களுக்கு வருகின்றவர்கள் விமான நிலையத்தில் எடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரையில் தனிமைப்படுத்தல் செய்தால் பொதுவானது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அபுதாபி மற்றும் ராஸ்-அல்-கைமா ஆகிய எமிரெட்டில் வருகின்றவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது பலரையும் கவலையடைய செய்துள்ளது. வரும் நாட்களில் இது தொடர்பாக திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு வெளியாகுமா என்பது தெரியவில்லை.இன்றைய தினம் அமீரகம் வந்த நபர்களின் அனுபவங்கள் பற்றி விரிவாக படிக்க இந்த link-ஐ Click செய்யவும்: https://www.arabtamildaily.com/2021/08/indian-travelers-arrived-directly-today-after-a-long-time-in-the-united-arab-emirates.html