அபுதாபியில் 20 நண்பர்கள் சேர்ந்து எடுத்த Big-Ticket மூலம் 30 கோடி ரூபாய் இந்தியருக்கு பரிசுத்தொகை அடித்தது
Image : 30 கோடி வென்ற 20 நண்பர்கள்
அபுதாபி பிக் டிக்கெட்டின் மூலம் 30 கோடி அதிர்ஷ்டம் இந்தியர்களை தேடிவந்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது
அபுதாபியில் நேற்று இரவு நடந்த பிக் டிக்கெட்டின் 230 வது தொடர் டிராவில் முதல் பரிசு 1.5 கோடி திர்ஹாம் (30 கோடி இந்திய ரூபாய்) இந்தியர்களுக்கான சனூப் சுனிலுக்கு அடித்தது. 183947 என்ற எண் கொண்ட டிக்கெட் மூலம் அவர் கோடீஸ்வர் ஆகியுள்ளார். சனூப் ஜூலை 13 அன்று ஆன்லைன் மூலம் இந்த பரிசு டிக்கெட்டை வாங்கினார். சனூபின் பெயரில் LuLu-யில் வேலை செய்கின்ற 20 நண்பர்கள் சேர்ந்து இதை வாங்கினர். கேரளாவை சேர்ந்த நடிகர் ஹரிஸ்ரீ அசோக்கின் மருமகன் சனூப் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பரிசான 10 லட்சம் திர்ஹம் (2 கோடி இந்திய ரூபாய்) இந்தியரான ஜான்சன் குஞ்சுக்குஞ்சு வென்றார்.
மேலும் கடைசி டிராவில் முதல் பரிசை வென்ற ரஞ்சித் இம்முறை முதல் பரிசு வெற்றியாளரை தேர்ந்தெடுத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற சனூப் சுனிலை Big-Ticket பிரதிநிதிகள் live நிகழ்ச்சி நடைபெற்ற நேரத்தில் அழைத்தனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் கைபேசியை எடுக்கவில்லை. மூன்றாம் பரிசான 500,000 திர்ஹாம்(1 கோடி இந்திய ரூபாய்) பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹன்னா ஹமாதி வென்றார்.டிக்கெட் எண் 113424 மூலம் இந்த பரிசை அவர் பெற்றார். நான்காம் பரிசான 350,000 திர்ஹாம் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த தன்வீர் மஹ்தப் இஸ்லாமுக்கு கிடைத்தது. அவருக்கு டிக்கெட் எண் 238404 மூலம் இந்த அதிர்ஷ்டம் அடித்தது. ஐந்தாவது பரிசான 100,000 திர்ஹாம் இந்தியாவை சேர்ந்த ரெனால்ட் டேனியல் வாங்கிய டிக்கெட் எண் 038753-க்கு அடித்தது. ஆறாவது பரிசான 90,000 திர்ஹாம்களை டிக்கெட் எண் 071148 மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பாட் மசாஹுத் வென்றார்.
அதுபோல் ஏழாவது பரிசான 80,000 திர்ஹாம்களை இந்தியாவை சேர்ந்த ஷினம் வயல் குனியில் வாங்கப்பட்ட டிக்கெட் எண் 318718-க்கு அடித்தது. எட்டாவது பரிசு 70,000 திர்ஹாம் இந்தியாவைச் சேர்ந்த ராய் ஜோஸ் என்பவருக்கு அவர் எடுத்த டிக்கெட் எண் 239485 அடித்தது. ஒன்பதாவது பரிசான 60,000 திர்ஹம் இந்தியாவை சேர்ந்த அகில் அரக்கல் விஸ்வாம்பரன் என்ற நபருக்கு டிக்கெட் எண் 227474 மூலம் அடித்தது. பத்தாவது பரிசான 50,000 திர்ஹாம் இந்தியாவை சேர்ந்த அப்சல் அப்துல் பஷீரின் என்பவருக்கு டிக்கெட் எண் 195400 மூலம் கிடைத்தது. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அம்ஜத் இஸ்மாயில் முகமது இஸ்மாயில் அன்வாரி என்பவர் பிக் டிக்கெட்டின் டீம் கார் Promotion மூலம் ரேஞ்ச் ரோவர் வேலார் காரை வென்றார். டிக்கெட் எண் 002785 மூலம் அவரது கனவு வாகனம் அவருக்கு கிடைத்தது.