குவைத்தில் போலியான சான்றிதழ்கள் பயன்படுத்தி மருத்துவத்துறையில் வேலை செய்துவந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் 90,000 தினார்கள் அபராதம்
Image : குவைத் நீதிமன்றம்
குவைத்தில் அரசு மருத்துவத்துறையில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார்
குவைத்தில் போலி சான்றிதழ்கள் தயார் செய்து சுகாதாரத்துறை அமைச்சகத்தில் வேலை செய்துவந்த ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இவரிடம இருந்து போலி ஆவணங்களை பறிமுதல் செய்யவும், இதுவரையில் அவர் பெற்ற சம்பளம் மற்றும் இதர நிதி சலுகைகளுக்கு பதிலாக 90,000 தினார்கள் (2.2 இந்திய ரூபாய் மதிப்பில் 2.2 கோடிக்கும் மேல்) அபராதமாக வசூலிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் அவர் வேலைக்காக சவுதி அரேபியாவிலிருந்து உயர்நிலைப் பள்ளி பயின்ற சான்றிதழையும் மற்றும் எகிப்திலிருந்து கல்லூரியில் படித்த சான்றிதழையும் போலியாக தயார் செய்து 2007 முதல் 2019 வரை குவைத் சுகாதார அமைச்சகத்தில் இந்த போலி ஆவணங்களின் பின்னணியில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் சட்டவிரோதமாக 30,000 தினார்கள் வரையில் இவர் சம்பாதித்ததாகவும் நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன. சான்றிதழ்களின் உண்மை தன்மையினை கண்டறியும் விரிவான பரிசோதனைக்குப் பிறகு குற்றவாளியான இந்த நபர் கைது செய்யப்பட்டார் என்பது குறி்ப்பிடத்தக்கது. இவர் எந்த நாட்டவர் என்ற தகவல் வெளியாகவில்லை.