குவைத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்
Image : செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் சனத்
குவைத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்
குவைத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் சனத் தெளிவுபடுத்தினார். நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமையை மதிப்பிடும் போது இத்தகைய அறிகுறிகளே வெளிப்படுவதாக தெரிவித்தார். கோவிட் பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகள் சுகாதாரத்துறை அமைச்சகம் சரியான திசையில் நகர்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக மேலும் அவர் கூறினார்.
நேற்றைய (07/08/21) தினம் சனிக்கிழமை நாட்டில் பதிவான தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் என்பது இந்த ஆண்டு மிகக் குறைந்த தினசரி பாதிப்பு விகிதமாகும். நேற்றைய தினம் 501 புதிதாக பாதிக்கப்பட்ட விபரங்கள் பதிவாகியுள்ளது. தடுப்பூசி வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்தியதன் மூலம் நாடு இந்த நிலைக்கு முன்னேறி உள்ளதாகவும் அவர் விளக்கினார். தற்போது குவைத்தில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அடுத்த மாத இறுதிக்குள், நாட்டில் இலக்கு வைக்கப்பட்ட மக்கள் அனைவரும் தடுப்பூசி வழங்கும் பணிகள் முடியும் என்று சுகாதார அமைச்சகம் நம்புகிறது.