துபாய் புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் ஏர் ஹோஸ்டஸ் நிற்கும் நம்பமுடியாத வீடியோ உண்மையில் படமாக்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது
Image credit: Emirates Airlines
துபாய் புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் ஏர் ஹோஸ்டஸ்;நம்பமுடியாத வீடியோ உண்மையில் படமாக்கப்பட்டது
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் சீருடை அணிந்த உலகின் மிக உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலீஃபாவின் மேல் விமான பணிப்பெண் நிற்கும் வீடியோ காட்சிகள் நேற்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலானது. இங்கிலாந்து பயணக் கட்டுப்பாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விலக்கு அளித்ததை அடுத்து எமிரேட்ஸ் வெளியிட்ட விளம்பரத்தில் இப்படிப்பட்ட உடலை சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இருந்தன. வீடியோ வெளியானதிலிருந்து, அது உண்மையில் படமாக்கப்பட்டதா....?? என்ற சந்தேகம் இருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்வு செய்து வருகின்றனர்.
எமிரேட்ஸ் நேற்று வெளியிட்ட விளம்பரத்தில் உலகின் உச்சியில் நிற்கிறோம் என்ற தலைப்புடன் இதை வெளியிட்டது. ஆனால் பலரது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக எமிரேட்ஸ் இது உண்மையில் பச்சைத் திரைகள் போன்ற தொழில்நுட்பங்கள் எதுவும் பயன்படுத்தாமல் படமாக்கப்பட்டது எனவும், நிக்கோல் ஸ்மித் லுட்விக் என்ற தேர்ந்த ஸ்கை டைவிங் பயிற்றுவிப்பாளர், எமிரேட்ஸ் கேபின் குழு உறுப்பினராக வீடியோவில் இடம்பெற்றுள்ளார் எனவும், மேலும் ஒரு சிலரின் உதவி மற்றும் முயற்சியால், இந்த வீடியோ 828 மீட்டர் உயரத்தில் படமாக்கப்பட்டது எனவும்,கடுமையான பாதுகாப்பு வசதிகள், திட்டமிடல் மற்றும் சோதனைகள் முடித்த பிறகு வீடியோ எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் வீடியோவை படமாக்க முடிவு செய்தபோது, நான் முதலில் உண்மையான தங்களின் எமிரேட்ஸின் விமான பணிப்பெண்களை அணுகினோம் எனவும், சிலர் இதற்கு முன்வந்தனர் எனவும சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் கடைசியில் பாதுகாப்பை உறுதி செய்ய, அனுபவம் வாய்ந்த ஸ்கை டைவர் இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு நடவடிக்கையும் கவனமாக எடுக்கப்பட்டது. பெண்மணியை அதற்கு மேல் நிறுத்த ஒரு மேடை மற்றும் ஒரு சிறிய தூண் அமைக்கப்பட்டது.காலை சூரிய ஒளி வெளியானதும் படப்பிடிப்பு தொடங்கியது. புர்ஜ் கலீஃபாவின் 160 வது மாடியிலிருந்து மேலே செல்ல குழுவுக்கு ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் ஆனது. மேலே செல்ல பல ஏணிகள் மற்றும் படிக்கட்டுகள் ஏற வேண்டியது இருந்தது. இந்த விளம்பரம் எடுத்த படங்குழு புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் சுமார் ஐந்து மணிநேரம் இந்த வீடியோவை படமாக்கியது. ட்ரோன்கள் பயன்படுத்தி காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டன. இது தொடர்பான எமிரேட்ஸ் தலைவர் டிம் கிளார்க் கூறுகையில் புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் ஏற அனுமதிக்கப்பட்டவர்களில் அரிதான நபர்களில் தங்கள் நிறுவன விளம்பரம் செய்ய வழங்கப்பட்ட வாய்ப்புக்காக பெருமைப்படுகிறேன் என்றார். இதற்கு முன்னர் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் மற்றும் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் ஆகியோரும் புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் ஏறியுள்ளனர் வீடியோ ஷூட்டின் காட்சிகள் பார்க்க Link: https://youtu.be/HagU3vUp0Ck