குவைத்தில் கிரிக்கெட் போட்டிக்கு இடையே மனைவி மற்றும் குழந்தைகள் முன்னர் மயங்கி விழுந்த இந்தியர் உயிரிழந்தார்
Image : உயிரிழந்த ரினு ஜேக்கப்(வயது-39)
குவைத்தில் கிரிக்கெட் போட்டிக்கு இடையே மயங்கி விழுந்த இந்தியர் உயிரிழந்தார்
குவைத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்கு இடையே மயங்கி விழுந்த இந்தியர் மாரடைப்பால் இன்று(08/08/21) மாலையில் உயிரிழந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சுலைபிகாட் பகுதியில் வைத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் அதில் விளையாடிக் கொண்டிருந்த இந்தியா,கேரளா மாநிலம், ஆலப்புழா, ஹரிப்பாடு பகுதியே சேர்ந்த ரினு ஜேக்கப்(வயது-39) என்ற இளைஞர் திடிரென மயங்கி கீழே விழுந்தார். அவரது மனைவியும் குழந்தைகளும் விளையாட்டை நேரடியாகபார்க்க மைதானத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களின் கண்ணெதிரே இந்த துயரமான சம்பவம் நடந்தது. உடனடியாக அவரை நண்பர்கள் மீட்டு ஃபர்வானியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த ரினு அவர்களுக்கு ரெஜினி என்ற மனைவியும், ஜுஹான்,ரோஹன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.