இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களின் பயன்படுத்தப்படாத சவுதி விசிட் விசாக்கள் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படும்
Image : சவுதி மன்னர் அவர்களின் புகைப்படம்
சவுதியில் நேரடியாக நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள நாட்டவர்களின் காலவதியான விசா விசாக்கள் இலவசமாக நீட்டிக்கப்படும்
இந்தியா உட்பட பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் நாடுகளிலிருந்து சவுதியில் வருவதற்காக எடுக்கப்பட்ட விசிட் விசாக்களின் காலாவதி செப்டம்பர் 30,2021 வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. விசா நீட்டிப்பு இலவசமாக எந்த கட்டணம் இல்லாமல் தானாகவே நீட்டிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் கணக்கு மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கீழே உள்ள Link மூலம் https://enjazit.com.sa/enjaz/extendexpiredvisa விசா தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட நபர்கள் அறிய முடியும். மேலும் அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து சவுதியில் நேரடியாக நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட நிலையில், சவுதியில் நுழைய முடியாத காரணத்தால் காலாவதியான விசிட் விசா நபர்களே இதன் பலனை அடைவார்கள் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த மாதம் பாஸ்போர்ட் இயக்குநரகம்(ஜவாசத்) நாட்டிற்கு வெளியே உள்ள நேரடியாக நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்தவர்களின் இக்காமா, Exit, Re-entry விசாக்கள் மற்றும் விசிட் விசா ஆகியவற்றின் காலவதியை ஆகஸ்ட்-31,2021 வரை இலவசமாக நீட்டிக்கப்படும் என்று அறிவித்தது. மன்னர் சல்மான் அவர்களின் உத்தரவின்படி தற்போது பயணத் தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதேநேரம் Multiple entry விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த இலவச புதுப்பித்தல் கிடையாது என்று அந்த நேரத்தில் ஜவாசத் தெளிவுபடுத்தியிருந்தது. மேலும் வேலை விசா(இக்காமா) மற்றும் Visit Visa வைத்திருக்கும் பின்வரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மூன்றாவது நாட்டில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்த பின்னரே சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பட்டியலில் இந்தியா,பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகியவை நேரடியாக நுழைய தற்காலிகமாக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.