BREAKING NEWS
latest

Wednesday, August 25, 2021

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்களை ஆள்சேர்ப்பு செய்யும் ஏஜென்சிகளின் பகல் கொள்ளைக்கு எதிராக இந்திய தூதர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்களை ஆள்சேர்ப்பு செய்வது தொடர்பான இந்திய தூதர் பேச்சுக்கு குடிமக்கள் மத்தியில் வரவேற்பு

Image : இந்திய தூதர் சிபி ஜார்ஜ்

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்களை ஆள்சேர்ப்பு செய்யும் ஏஜென்சிகளின் பகல் கொள்ளைக்கு எதிராக இந்திய தூதர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

குவைத்துக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் குடிமக்கள்(குவைத்திகள்) மத்தியிலும் நன்கு அறியப்பட்ட நபராக மாறிவருகிறார். இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்கு ஆள்சேர்ப்பது தொடர்பாக சில தினங்களும் முன்பு வெளியிடப்பட்ட அறிக்கை அவரை குவைத் நாட்டவர்களிடையே மேலும் பிரபலமடைய செய்துள்ளது. கடந்த வாரம் குவைத் நாட்டின் அரபு பத்திரிகையாளர்களுக்கு ஓணம் பண்டிகையையொட்டி இந்திய தூதரகம் சிறப்பு விருந்து அளித்தது. விழாவில் ஊடகவியலாளர்களுடனான நட்பு உரையாடலின் போது இந்தியாவிலிருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பிரச்சனை முன்னேழுந்ததது.

இந்தியா மற்றும் குவைத் இடையே உள்நாட்டு தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கையெழுத்தானது. இதுகுறித்து தூதுவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 300 தினார் செலவில் வீட்டுவேலைக்கு இந்திய தொழிலாளர்கள் கொண்டு வந்து அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார். இருப்பினும், தற்போது 900 முதல் 1,200 தினார்கள் வரைவில் வசூலிக்கப் படுவதாக செய்தியாளர் தெரிவித்தபோது தூதர் சிபி ஜார்ஜ் ஆச்சரியப்பட்டார்.

இந்தியாவில் ஆட்சேர்ப்பு கட்டணம் 120 தினார் மட்டுமே என்றும் இதை விட அதிகமாக வசூலிக்கும் ஏஜென்சிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதையடுத்து தூதரின் அறிக்கையை குவைத்தில் உள்ள முன்னணி அரபு ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டனர். மேலும் உள்நாட்டு தொழிலாளர் பற்றாக்குறை தற்போது குவைத்துக்குள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்தியாவைச் சேர்ந்த வீட்டு வேலை செய்பவர்களுக்கும் குவைத்திகள் முன்னுரிமை அளிக்கிறார்கள். முகவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இந்திய வீட்டுப் பணியாளர்களைக் கொண்டுவர பெரும் கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் தூதரின் பேச்சு குவைத் மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அதே நேரத்தில், தூதரின் அறிக்கை குவைத் மற்றும் இந்தியாவில் உள்ள வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை கலக்கமடைய செய்துள்ளது. இந்தியா-குவைத் உள்நாட்டு தொழிலாளி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஒரே நேரத்தில் பயனளிக்கும் பல நிபந்தனைகளை உள்ளடக்கியது ஆகும். எனவே இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆட்சேர்ப்பு மாஃபியாக்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இதன் காரணமாகவே சில மாஃபியா குழுக்கள் தூதரகத்திற்கு எதிராக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

Add your comments to குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்களை ஆள்சேர்ப்பு செய்யும் ஏஜென்சிகளின் பகல் கொள்ளைக்கு எதிராக இந்திய தூதர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

« PREV
NEXT »