BREAKING NEWS
latest

Monday, August 30, 2021

குவைத்தில் டெலிவரி வேலை செய்கின்ற தொழிலாளர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளன

குவைத்தில் அக்டோபர் 3 முதல் முக்கிய சாலைகளில் டெலிவரி பைக்குகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

Image credit: குவைத்தின் முக்கிய சாலை

குவைத்தில் டெலிவரி வேலை செய்கின்ற தொழிலாளர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளன

குவைத் நெடுஞ்சாலைகள்(Highways) மற்றும் வளைய சாலைகளில்(Rong Road) டெலிவரி பைக்குகளை இயக்க தடை அமலுக்கு வருகின்றன. இந்த புதிய முடிவு அக்டோபர்-3,2021 முதல் நடைமுறையில் வருகின்றன என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக நாட்டின் முக்கியமான First Ring Road, Fourth Ring Road, Fifth Ring Road, Sixth Ring Road, Seventh Ring Road, King Abdul Aziz Road 30, King Fahd Bin Abdulaziz Road 40, King Faisal bin Abdulaziz Road 50, Al-Ghazali Road 60, Jahra Road, Gamal Abdel Nasser Road (Upper Bridge) மற்றும் Jaber Bridge ஆகிய சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவர்கள் குறுக்குவெட்டு பகுதிகளையும், ரவுண்டானாவையும் பயன்படுத்தலாம்.

முன்னதாக நாட்டின் போக்குவரத்து மற்றும் செயல்பாடுகள் தொடர்பான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜமால் அல்-சயீக் அவர்கள் டெலிவரி நிறுவனங்களின் கூட்டமைப்பில் உரையாற்றினார். அப்போது சாலைகளில் டெலிவரி பைக்குகள் தொடர்பாக ஏற்ப்படும் விபத்துகள் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தார். அதேபோல் டெலிவரி பைக்குகளில் பொருட்கள் எடுத்துச்செல்ல இணைக்கப்பட்டுள்ள பெட்டியில் சமிக்ஞை விளக்குகள் இணைக்க வேண்டும், அதேபோல் பெட்டிகளுக்குப் பின்னால் இரவில் பிரதிபலிப்பு Stickers ஒட்டவும் வேண்டும் மற்றும் வாகன ஓட்டி கண்டிப்பாக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்ட கூடாது எனவும் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முடிவு பைக் ஓட்டுபவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Add your comments to குவைத்தில் டெலிவரி வேலை செய்கின்ற தொழிலாளர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளன

« PREV
NEXT »