இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் குவைத்துக்கு நேரடி விமான சேவை துவங்குவதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது
Image: Kuwait City
இந்தியா உள்ளிட்ட ஆசியா நாடுகளில் இருந்து வருகின்ற ஆகஸ்டு 22 முதல் நேரடியாக விமான சேவை துவங்குகிறது
இந்தியா உட்பட அனைத்து நாடுகளில் இருந்தும் நேரடி விமான சேவைக்கு துவங்குவதற்கு இன்று(18/08/21) புதன்கிழமை மாலையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்பு தடை விதித்த இந்தியா, இலங்கை, எகிப்து, பாகிஸ்தான், நேபாளம், பங்காளதேஷ் உள்ளிட்ட மற்ற ஆசியா நாடுகளில் இருந்தும் நேரடி விமான சேவைக்கு வருகின்ற ஆகஸ்டு-22,2021 முதல் இயக்க அனுமதி வழங்கி தீர்மானம் வெளியாகியுள்ளது. அதேபோல் தினசரி விமான நிலையம் வருகின்ற பயணிகளின் எண்ணிக்கையையும் 7,500 யில் இருந்து இரு மடங்காக்கி அதிகரித்து 15,000 ஆக அறிவித்துள்ளது. கொரோனா அவசர நிலைகளுக்கான குழுவினால் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகள் கடைபிடித்து முதல்கட்டமாக Validity விசா உள்ளவர்கள் குவைத்திற்கு நேரடியான பயணிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது. கூடுதல் விரிவான விபரங்கள் விரைவில் வெளியாகும்.