குவைத்தில் இரவு நடத்த விபத்தில் 2 வாகனங்கள் தீபிடித்து 5 பேர் பலி மற்றும் 15 பேர் காயமடைந்தனர்
Image credit: விதத்தில் சிக்கிய வாகனங்கள்
குவைத்தில் நேற்று இரவு இரண்டு வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்
குவைத்தின் Abdali சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில்உள்ள Jal Al-Liyah பகுதியில் வைத்து நேற்று(19/08/21) வியாழக்கிழமை இரவு சுமார் 8:45 மணியளவில் சிறிய ரக பேருந்து மற்றும் வேன் இரண்டும் மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 5 பேர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் எயர் ஆம்புலன்ஸ் மூலமும், மற்றவர்கள் அவசர ஊர்தி மூலமும் Jahra மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் பயங்கரமாக தீபிடித்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.
இந்த விபத்து குறித்து அவசரகால உதவி மையத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் Jahra பிரிவு தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்கள் குவைத்தில் உள்ள அமெரிக்கா ராணுவத்திற்கு Logistics சேவைகள் வழங்குகின்ற நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவார்கள். மேலும் இந்த துயரமான விபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவருமே வெளிநாட்டு தொழிலாளர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுபோல் உயிரிழந்த மீதியுள்ள 3 பேர் எகிப்து, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சிகிச்சையில் உள்ள 15 பேர் எந்தெந்த நாட்டவர்கள் என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை.இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரனை துவங்கியுள்ளனர்.