குவைத்திற்கு இந்தியாவில் இருந்து செப்டம்பர்-2 முதல் விமான சேவை;760 பயணிகள் வீதம் வாரத்திற்கு அனுமதிக்க முடிவு
Image : Kuwait Airport
குவைத் விமானப் போக்குவரத்து துறையின் இயக்குநர் யூசுப் அவர்கள், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் அனூப்பந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்
இந்தியாவில் இருந்து குவைத்துக்கு வாரத்திற்கு 760 பயணிகள் மட்டுமே முதல் கட்டமாக, அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக குவைத் சிவில் விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினர். இதன்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விமானங்களை இயக்க முதல்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வெளியாகியுள்ள கடிதத்தில் குவைத்-இந்தியா நேரடி விமான சேவையைத் தொடங்குமாறு குவைத் அதிகாரிகள், இந்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் இரு நாடுகளின் விமான நிறுவனங்களுக்கும் சேர்ந்து வாரத்திற்கு 760 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி குவைத் ஏர்வேஸ்க்கு 230 இருக்கைகளும், ஜசீரா ஏர்லைன்ஸ்க்கு 150 இருக்கைகளும் மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ்க்கு 380 இருக்கைகளும் என்ற விகிதத்தில் விமான இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்-2,2021 முதல் சேவைகள் தொடங்கப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது. இந்த கடிதத்தை குவைத் விமானப் போக்குவரத்து துறையின் இயக்குநர் ஜெனரல் யூசுப் அல் ஃபாஸான் இன்று(30/08/21) திங்கள்கிழமை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் அனூப்பந்துக்கு அனுப்பியுள்ளார். இதற்கிடையே விமான நிலையம் வழியாக தினசரி நுழைய அனுமதிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 7500 யில் இருந்து 10000 ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விமான சேவை ஒவ்வொரு வாரமும் இந்தியாவில் இருந்து செவ்வாய்கிழமை தினங்களில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.