அமீரகத்தில் ஆகஸ்டு-5 முதல் வெளிநாட்டினர் நுழைய சற்றுமுன் அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது
Image credit: Emirates Airlines
ஆகஸ்டு-5 முதல் இந்தியர்கள் உள்ளிட்டவர்களில் Validity Work Permit மற்றும் இரண்டு டோஸ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்தவர்கள் நிபந்தனைகளை பின்பற்றி அமீரகம் வரலாம்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட்-5,2021 முதல் அதாவது நாளை மறுநாள் முதல் Uae Validity Work Permit(குடியிருப்பாளர்) உள்ளவர்கள் அனைவருமே நிபந்தனைகள் பின்பற்றி வரலாம் என்று நாட்டின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையமும் மற்றும் தேசிய அவசரநிலை நெருக்கடி பேரிடர் மேலாண்மை ஆணையமும் இன்று(03/08/21) செவ்வாய்க்கிழமை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல்- 24,2021 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் அமீரகம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஏறத்தாழ மூன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று தடை நீக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் அமீரகத்தில் நுழைய முடியாமல் நிலவிவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளில் இருந்து பின்வரும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 6 நாடுகள் மீதான தடையினை நீக்கியுள்ளாதாகவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி ஆகஸ்டு-5,2021 முதல் அமீரகத்தில் நுழைய நிபந்தனைகள் பின்வருமாறு:
- Validity Work Permit உள்ள நபராக இருக்க வேண்டும்(இவ்வளவு நாட்களுக்குள் Validity விசா உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை, 6 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் கடந்தவர்கள் வரலமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம் அதனால் இந்த விளக்கம்)
- அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர், அதவாது இரண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்கள் கடந்தவராக இருக்க வேண்டும். இந்தியாவின் கோவிட்சீல்ட் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும்.
- துபாயில் வசிக்கின்றவர்கள் என்றால் ICA தளத்தில் பதிவு செய்தும், அபுதாபி உள்ளிட்ட மற்ற எமிரேட்களில் வசிப்பவர்கள் GDRFAD தளத்தில் பதிவு செய்து அதிகாரிகளிடம் புறப்படுவதற்கு முன்பு அனுமதி பெறவேண்டும்.
- இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் QR-CODE உடன், உங்கள் பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதை பயணத்தின் போது உங்கள் கைவசம் வைத்திருக்கவும் வேண்டும்.
- முன்னர் அறிவிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட PCR Test Negative சான்றிதழ் மற்றும் புறப்படும் விமான நிலையத்தில் வைத்து 4 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்படும் Rapid Test எடுத்துக்கொண்ட Negative சான்றிதழ் ஆகியவையும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
- அமீரக விமான நிலையத்தில் வந்திறங்கிய பிறகு, விமான நிலையத்தில் வைத்து மற்றொரு PCR பரிசோதனை மீண்டும் குடியிருப்பாளருக்கு நடத்தப்படும்(பரிசோதனை முடிவு வெளிவர 12 மணிநேரம் முதல் ஒரு நாட்கள் வரையில் ஆகலாம், சில நேரங்களில் அதுவரையில் Self Quarantine இருக்க வேண்டியது இருக்கும்)
- உங்கள் விசா காலாவதி பற்றி சந்தேகம் உள்ளவர்களுக்கான பதில். நாளைய தினம் உங்கள் விசா முடிகிறது என்று வைத்து கொள்ளுங்கள். நீங்கள் இன்றைய தினம் வரையில் மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றி அமீரகத்திற்கு பயணிக்க முடியும் அதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
- இதுபோல் Visit Visa வைத்திருப்பவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபராக இருந்தாலும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்களுக்கு அனுமதி வழங்கி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேநேரத்தில் அமீரகத்தில் பணிபுரியும் கீழ் குறிபிட்ட பிரிவினர்கள் மட்டும் தடுப்பூசி போடப்படாதவர்களாக இருந்தால் மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றி வரலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ துறையில் வேலை செய்கின்ற தொழில்நுட்ப(டெக்னீசியன்கள்) வல்லுநர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் மாணவர்கள், மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்ப வாய்ப்புள்ள நபர்கள் ஆனால் இவர்களிடம் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி இருக்க வேண்டும், பெடரல் மற்றும் Local Government Agencies யில் பணிபுரிபவர்களும் நாடு திரும்பலாம். அதேபோல் துபாயில் எக்ஸ்போ 2020 யின் பங்கேற்பாளர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியின் பான்சர்கள் ஆகியோருக்கும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.