BREAKING NEWS
latest

Thursday, August 19, 2021

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் குவைத்தில் நேரடியாக நுழைய முடியும் என்ற மகிழ்ச்சியான செய்தி நேற்று மாலையில் வெளியானது அனைவரும் அறிந்ததே

இந்தியாவில் இருந்து குவைத்தில் ஆகஸ்டு-22 முதல் நேரடி நுழைவு அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,நிபந்தனைகள் பின்வருமாறு

Image : KuwaitCity

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் குவைத்தில் நேரடியாக நுழைய முடியும் என்ற மகிழ்ச்சியான செய்தி நேற்று மாலையில் வெளியானது அனைவரும் அறிந்ததே

இந்தியாவில் இருந்து குவைத்துக்கு நேரடி விமானங்களின் சேவைகள் ஆகஸ்ட்-22,2021 ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதிக்கப்படும் என்று நேற்று(18/08/21) புதன்கிழமை மாலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து குவைத்துக்கு நேரடியாக வருகின்ற பயணிகள் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் நாட்டில் அனுமதிக்கப்படுவார்கள்.

  1. குவைத் சுகாதரத்துறை மூலம் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியின் 2 டோஸ் முடித்து 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும்
  2. குவைத் சுகாதாரத்துறையின் Immune Application-யில் பயணியின் நிலைமை பச்சையாக வைத்திருக்க வேண்டும்(Green Signal)
  3. உடன் எடுத்து வருகின்றன தடுப்பூசி சான்றிதழில் உள்ள பெயர் பொருந்தும் விதத்தில் பாஸ்போர்ட், தடுப்பூசியின் வகை, தடுப்பூசி டோஸ் எடுக்கும் தேதிகள், தடுப்பூசி போட்ட இடம், QR குறியீடு மின்னணு முறையில் சரிபார்ப்புக்கு விதத்தில் இருக்க வேண்டும்
  4. 72 மணி நேரத்திற்குள் செல்லுபடியாகும் விதத்தில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சான்றிதழை பயணத்தின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
  5. குவைத்தின் முசாபர் மற்றும் ஷிலோனக்  செயல்களிலும் பதிவு செய்ய வேண்டும்.
  6. தடுப்பூசி எடுத்துக்கொண்டு வருபவர்கள் குவைத் வந்த பிறகு ஒரு வார வீட்டு தனிமைப்படுத்தல் செய்துக் கொள்ள வேண்டும்.( 7 Days Home Quarantine)
  7.  மேலும் உங்கள் னிமைப்படுத்தலை முடிக்க விரும்பினால், குவைத்தில் நுழைந்த பிறகு  7 நாட்களுக்குள் ஒரு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். மேலும் அவர்கள் வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் தனிமைப்படுத்தலை முடித்து கொள்ள முடியும்.
  8. குவைத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஃபைசர்(Pfizer), ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனெகா(Oxford-AstraZeneca), மாடர்னா(Moderna) மற்றும் ஜான்சன் & ஜான்சனின்(Johnson & Johnson) ஆகியவை ஆகும். இதில் Oxford-AstraZeneca தான் இந்தியாவில் Covishield(கோவிஷீல்ட்) என்ற பெயரில் வழங்கபடுகிறது. எனவே இந்தியர்கள் குவைத் திரும்ப பிரச்சனை இல்லை, Covishield-க்கு குவைத் சுகாதரத்துறை சார்பில் அனுமதியும் வழங்கியுள்ளது. ஆனால் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி பூர்த்தி செய்த நபர்கள் அதற்கான சான்றிதழை குவைத் சுகாதாரத்துறை அறிமுகம் செய்துள்ள தளத்தில் பதிவு செய்து அதற்கு அனுமதி வழங்கினால் மட்டுமே Immune செயலியில் Green Signal ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  அதன் பிறகு மட்டுமே பயணத்திற்காக Ticket உள்ளிட்டவை எடுங்கள். அதேபோல் முதல்கட்டமாக Validity Visa  உள்ள நபர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் பின்பற்றி குவைத்தில் நுழைய முடியும்.

இதற்கிடையே குவைத் அங்கிகாரம் வழங்காத Sinopharm, Sputnik உள்ளிட்ட பிற தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட நபர்கள் குவைத்தில் நுழைய முன்றாவது டோஸ் தடுப்பூசியாக குவைத் சுகாதரத்துறை அங்கீகாரம் வழங்கியுள்ள 4 தடுப்பூசிகளில் எதாவது ஒரு தடுப்பூசியை எடுக்க வேண்டும் என்ற தகவலும் நேற்றைய அறிக்கையில் வெளியாகியுள்ளது. மேலும் குவைத்தில் இருந்து தடுப்பூசி எடுத்து தாயகம் சென்ற நபர்கள் மீண்டும் குவைத் திரும்புகிற நேரத்தில் Immune செயலியில் Green Signal தெரிய வேண்டும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. குவைத் விமான நிலையம் இந்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸின் Second wave மூலம் நோய்தொற்று அதிகரித்த நிலையில் இரண்டாவது முறையாக மூடப்பட்டது. தொடர்ந்து இந்த மாதம் ஆகஸ்ட்-1,2021 முதல் வெளிநாட்டினர் நாட்டில் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது என்றாலும், இந்தியா உட்பட சில நாடுகளிலிருந்து வரும் பயணிகள் நுழைவதில் நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தது. இந்நிலையில் அமைச்சரவையின் நேற்றைய புதிய முடிவு மூலம் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாக குவைத் திரும்புவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

Kuwait Airport | Return Kuwait | August 22

Add your comments to இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் குவைத்தில் நேரடியாக நுழைய முடியும் என்ற மகிழ்ச்சியான செய்தி நேற்று மாலையில் வெளியானது அனைவரும் அறிந்ததே

« PREV
NEXT »