BREAKING NEWS
latest

Thursday, August 5, 2021

ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியப் பயணிகள் இன்று நேரடியாக வந்தனர்

அமீரகத்தில் இன்று நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரடியாக வந்திறங்கிய இந்திய பயணிகள்;குழப்பங்களுக்கு தெளிவான விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது

Image : Emirates flight from Kochi

ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியப் பயணிகள் இன்று நேரடியாக வந்தனர்

இந்தியாவில் இருந்து நேரடியாக நுழைய அமீரகம் விதித்திருந்த தடை இன்று(05/08/21) வியாழக்கிழமை அதிகாலையில் 00:01 மணியுடன் விலகிய நிலையில் துபாய் விமான நிலையத்தின் Terminal-3 யில் இந்திய பயணிகள் வந்திறங்கினர். ஆனா‌ல் 15 முதல் 20 வரையிலான குறைந்த பயணிகளை மட்டுமே காண முடிந்தது. மேலும் பயணங்கள் தொடர்பான சந்தேகங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில் இதற்கு தெளிவான விளக்கமாக இந்த பதிவு இருக்கும் என்று நம்புகிறோம். வந்திறங்கிய இந்திய பயணிகள் கூறிய விபரங்களை தெளிவாக பார்ப்போம். முதல்கட்டமாக யார் யார் நுழைவது என்பதே குழப்பமாக உள்ளது. அதற்கான பதில் அமீரக விசா உள்ள அனைத்து தரப்பு தொழிலாளர்களும் வரலாம் ஆனால் நிபந்தனைகள் பின்வருமாறு:

  1. அமீரகத்தில் இருந்து 2 டோஸ் எடுத்த நபர்கள் மட்டுமே விமானத்தில் நுழைய அனுமதி வழங்கபடுகிறது.
  2. மேலும் தடுப்பூசி நிபந்தனை இல்லாத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட சில பிரிவுகளில் உள்ளவர்களையும் நுழைய அனுமதி வழங்கியுள்ளனர். 
  3. அது போல் பயணத்திற்கு முன்பு  ICA அல்லது GDRFAD தளத்தில் பதிவு செய்து அனுமதி கிடைத்திருக்க வேண்டும்.
  4. 48 மணிநேரத்திற்குள் எடுத்த PCR பரிசோதனை எதிர்மறை(Negative) சான்றிதழ் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
  5.  விமான நிலையத்தில் வைத்து 4 மணிநேரத்திற்குள் எடுத்த Rapid test  தொடர்பான எதிர்மறை(Negative) சான்றிதழ் கைவசம் இருக்க வேண்டும்.
  6. மேலும் Validity விசா இருந்தும் 6 மாதம் கடந்தவர்களின் விபரங்கள் System தில் காட்டவில்லை என்று சிலரை அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர்.
  7. ஒரு டோஸ் அமீரத்தில் எடுத்து இரண்டாவது டோஸ் இந்தியாவில் எடுத்த சில பயணிகளையும் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்களிடம் தற்போதைய அறிவிப்பில் புதிதாக எதாவது  திருத்தங்கள் வந்தால் பயணிக்க அனுமதி வழங்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
  8. மேலும் நேற்று இரவு வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் ICA அல்லது GDRFAD அனுமதி ஆகஸ்டு-4 ஆம் தேதி யிட்டு எடுத்திருந்தால் அவர்களை விமானத்தில் அனுமதிக்க வேண்டியது இல்லை எனவும், ஆகஸ்டு-5 தேதி யிட்டு தான் அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இது தெரியாமல் சில பயணிகள் விமான நிலையம் வந்த நிலையில் விமான நிலைய அதிகாரிகள் அமீரக அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் இந்த ஒரு காரணத்திற்காக அவர்களை திருப்பி அனுப்ப வேண்டியது இல்லை என்று கூறி விமானத்தில் ஏற அனுமதி வழங்கினர் என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த சலுகை செல்லும்படி ஆகுமா என்பது தெரியவில்லை. எனவே சான்றிதழ் ஆகஸ்டு 5-ஆம் தேதியிட்டுள்ளதா  என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் விமானத்தில் பயணித்த பயணிகள் வெளியிட்டுள்ள விபரங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதுபோல் அமீரக சுகாதாரத்துறையால் அங்கீகரித்த 2 டோஸ் தடுப்பூசி வெளிநாடுகளில் எடுத்த பயணிகள் நுழைய அனுமதி, விசா காலாவதி 6 மாதங்கள் கடந்த தொழிலாளர்கள் நுழைய அனுமதி மற்றும் விசிட் விசா நபர்கள் உள்ளிட்டவர்கள் நுழைய அனுமதி ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என்று நம்புவோம், இதற்கிடையே அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை யு.கே சிவப்பு பட்டியலில் இருத்து நீக்கி Amber list சேர்ந்துள்ள மகிழ்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.

Add your comments to ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியப் பயணிகள் இன்று நேரடியாக வந்தனர்

« PREV
NEXT »