இந்தியர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்திருந்தால் துபாய் திரும்ப முடியும் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது
Image credit: Vistara Airways
இந்தியர்க துபாய் திரும்ப முடியும் என்று புதிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது
இந்தியாவில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட, துபாயின் செல்லுபடியாகும் விசா கைவசம் இருந்தால் துபாய்க்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிறுவனங்கள் இன்று( 09/08/21) அறிவிப்பை வெளியிட்டுள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இரண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும். இது தொடர்பான புதிய அறிவிப்பை விமான நிறுவனங்கள் டிராவல் ஏஜென்ஸிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளனர். இதேபோல் தடுப்பூசி எடுக்காதவர்களும் துபாய் திருப்ப முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. இந்தியாவின் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனமும் மற்றும் துபாயின் Fly Dubai விமான நிறுவனமும் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இங்கு வெளியிட்டுள்ள செய்தி துபாய் விசா உள்ள நபர்களுக்கான அறிவிப்பு ஆகும். அமீரகத்தின் மற்ற எமிரேட்டிற்கு இந்தியாவில் இருந்து பயணிகள் வருவது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் அமீரக சிவில் விமான போக்குவரத்து துறை கடந்த ஆகஸ்டு-5,2021 தேதியிட்டு வெளியிட்ட பயண விதிமுறைகள் அனைத்தும் அப்படியே கடைபிடிக்க வேண்டியது இருக்கும். இது குறித்த கூடுதல் தெளிவான விபரங்கள் வரும் மணிநேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.