சவுதியில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பலாம் இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது
Image credit: Riyadh Indan Embassy
சவுதியில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற இந்தியர்கள் மீண்டும் நேரடியாக திரும்பி வரலாம்
சவுதி அரேபியாவில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட தாயகம் சென்ற இந்தியர்கள் மீண்டும் நாட்டிற்கு நேரடியாக திரும்பலாம் என்று இந்திய தூதரக அதிகாரிகள் சவுதி வெளியுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையினை மேற்கொள் காட்டி தெரிவி்த்துள்ளது. மேலும் அவர்கள் வேறொரு நாட்டில் தனிமைப்படுத்தலில் தங்க வேண்டிய அவசியமில்லை என்றும் இந்திய தூதரகத்திடம் தெரிவித்தனர். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து சற்றுமுன் ட்வீட் செய்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி இந்தியர்கள் சவுதி திரும்புவதற்கான நிபந்தனைகள் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போது அறிவிப்பின்படி சவுதி அரேபியாவில் இருத்து இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் திரும்பி வருவதற்கான அறிவிப்பே வெளியாகியுள்ளன மற்றவர்கள் விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது தெளிவாக இல்லை.