சவுதியில் இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நேரடியாக நுழைய அனுமதி தொடர்பான லெபனான் தூதர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
Image : Saudi Arabia
சவுதியில் தற்காலிகமாக நுழைய தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாட்டவர்கள் நேரடியாக நுழைய முடியும் என்ற நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது
சவுதியில் கொரோனா காரணமாக தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாட்டவர்கள் நேரடியாக நுழைய வரும் நாட்களில் அனுமதி வழங்கப்படும் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இது தொடர்பான சுற்றறிக்கை அங்குள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு சவுதி வெளியுறவுத்துறை அனுப்பியதாக சற்றுமுன் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில் இது உறுதிப்படுத்தும் விதமாக சவுதி லெபனான் தூதரக அதிகாரி வலீத் புகாரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சவுதி அரேபியாவில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்து தாயகம் சென்றவர்கள் மீண்டும் சவுதியில் நேரடியாக நுழைய எந்த தடையும் இல்லை எனவும், சவுதியின் Validity இகாமாவுடன், இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் நேரடியாக திரும்ப முடியும் எனவும் ஆனால் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தற்போது அனுமதி இல்லை எனவும் அவர் தூதரகத்தின் அதிகாரப்பூர்வமாக கணக்கு வழியாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சவுதியில் நுழைய Immune Green Signal கிடைத்த இந்தியர்கள் உள்ளிட்ட பலரும் முன்றாவது ஒரு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்து அங்கிருந்து பயண விதிமுறைகள் பின்பற்றி சவுதியில் நுழைந்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த புதிய அறிவிப்பின் பலன் கிடைக்குமா மற்றும் புதிய பயண நெறிமுறைகள் என்னவாக இருக்கும் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் சவுதி வெளியுத்துறை சார்பில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வரும் மணிநேரங்களில் தெரிய வரும்.