குவைத்தில் புதிதாக மற்றுமொரு கவர்னரேட் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
Image : KuwaitCity
குவைத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக ஒரு கவர்னரேட் உருவாக்க அரசு திட்டத்தை தயாரித்து வருவதாக தகவல்
குவைத்தில் உள்ள முத்லா(Mutlaa) பகுதியை மையமாகக் கொண்டு ஏழாவது கவர்னரேட்(Governorates) உருவாக்க அரசு திட்டத்தை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அல்-முஸ்லா என்ற பெயரில் ஏழாவது கவர்னரேட் உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய அளவிலான குடியிருப்பு பகுதிகள் உள்ள முஸ்லா மற்றும் வடக்குப்பகுதிகளை இணைத்து இதை உருவாக்குவதற்கான திட்டத்தை அரசு தயாரிக்கிறது. இது தொடர்பான தகவலை உள்ளூர் தினசரி நாளிதழ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.
மேலும் இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது எனவும், கூடுதலாக, தற்போதைய கவர்னரேட்டில் ஏற்படுகின்ற நெரிசலைக் குறைக்கவும், மேலும் நாட்டில் கூடுதல் வணிக முதலீட்டை கொண்டு வரவும் இது உதவும் என்று நம்பப்படுகிறது. தற்போது நாட்டில் ஆறு கவர்னரேட்டுகள் உள்ளன. அவை கேபிடல் கவர்னரேட், அஹ்மதி கவர்னரேட், முபாரக் அல் - கபீர் கவர்னரேட், ஃபர்வானியா கவர்னரேட் மற்றும் ஜஹ்ரா கவர்னரேட் ஆகியவை ஆகும். மேலும் புதிதாக உருவாக்க திட்டமிட்டுள்ள பகுதியாக முஸ்லா உள்ளிட்ட இடங்கள் இப்போது ஜஹ்ரா கவர்னரேட்டில் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.