அபுதாபிக்கு நேரடியாக வந்து மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் அமீரகத்தின் கோல்டன் விசாக்களை பெற்றுக் கொண்டனர்
Image : இருவர் கோல்டன் விசாக்களை பெற்றுக் கொண்டன காட்சி
மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு அவர்களின் சினிமா துறை சாதனைகள் மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமீரகத்தின் கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டது
பிரபல இந்திய திரைப்பட நடிகர்களான மம்மூட்டியும்,மோகன்லாலும் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வழங்கப்படும் 10 வருடத்திற்கான கோல்டன் விசாவை பெற்றுக்கொண்டனர். அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் ஆணையத்தின் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து இவர்கள் இருவரும் விசா பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்டைப் பெற்றனர். கோல்டன் விசா பெறுவதற்காக வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரான எம்.ஏ யூசுப் அலியுடன் இருவரும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்தது இறங்கினர். அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை ஆணையத்தின் தலைவர் முகமது அலி அல் ஷரஃபா அல் ஹம்மாடி மம்முட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசா பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை இன்று(23/08/21) மாலையில் வழங்கினார். இதற்கிடையே இன்று காலையில் இந்திய நடிகர் சுனில் ஷெட்டி தனக்கு வழங்கப்பட்ட கோல்டன் விசாவை நேரடியாக வந்து பெற்றிருந்தார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து மலையாள சினிமாவுக்கான வழங்கப்பட்ட அங்கீகாரமாக இதை பார்க்கிறேன் என்று மோகன்லால் கூறினார். மேலும் படத்தின் தயாரிப்புகளுக்கு ஆதரவளிப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். ஐக்கிய அரபு அமீரக அரசின் மரியாதை கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறிய மம்மூட்டி, மலையாளிகள் தங்களுக்கு வழங்கிய அங்கீகாரம் இது என்றும் கூறினார். கோல்டன் விசாவைப் பெறுவதில் எம்ஏ யூசப்சாயின் முயற்சிகளுக்கு அவர்கள் இருவரும் நன்றி தெரிவித்தனர். அமீரக கோல்டன் விசா பெறுவதற்காக இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு துபாய்க்கு வந்தனர். எம்.ஏ யூசுபாலியின் சகோதரர் எம்.ஏ அஷ்ரபாலியின் மகனின் திருமணத்திலும் இருவரும் கலந்து கொண்டனர். ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசா பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நபர்களுக்கு வழங்கப்படுகிறது. மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்களுக்கு கோல்டன் விசா கிடைப்பது இதுவே முதல் முறை. முன்னதாக இந்திய நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் கோல்டன் விசாக்களைப் பெற்றிருந்தனர். மேலும் ஷாருக்கான் அமீரக சுற்றுலா துறையின் Ambassador என்பதும் குறிப்பிடத்தக்கது