இந்தியா உள்ளிட்ட18 நாடுகளை சேர்ந்தவர்கள் செப்டம்பர்-1 முதல் நிபந்தனைகளுடன் ஓமானுக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Image credit: Oman Air
இந்தியர்கள் செப்டம்பர் முதல் மீண்டும் ஓமானுக்கு திரும்ப அனுமதி வழங்கி புதிய அறிவிப்பு இன்று மாலையில் வெளியாகியுள்ளது
இந்தியர்கள் ஓமானுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அந்நாட்டின் சிவில் ஏவியேஷன் ஆணையம்(CAA) இன்று(23/08/21) திங்கள்கிழமை மாலையில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் உட்பட சிவப்பு பட்டியலில் இருந்த18 நாடுகளில் இருந்து ஓமான் அங்கீகாரம் வழங்கியுள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி பூர்த்தி செய்து 14 நாட்கள் கடந்தவர்கள் நிபந்தனைகளை பின்பற்றி வருகின்ற செப்டம்பர்-1,2021 அன்று ஓமான் நேரப்படி 12:00 PM முதல் நாட்டிற்க்குள் நுழையலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இந்தியர்கள் வருகின்ற நேரத்தில் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் எடுத்துவர வேண்டும்.
அதே நேரம் நீண்ட தூர பயணமாக 8 மணிநேரத்திற்கு மேலாக பயணம் செய்து Transit ஆக வருகின்ற நபர்களாக இருந்தால் 96 மணிநேரத்திற்குள் எடுத்த பிசிஆர் பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் எடுத்துவர வேண்டும். மேலும் On-Arrival விசா நபர்களும் இந்த தேதி முதல் நாட்டில் நுழைய முடியும். அதேபோல் இன்றைய அறிக்கையில் இனிமுதல் ஓமானுக்கு வருகின்ற 18-வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவு உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவையில்லை. இது தொடர்பான அறிவிப்பை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு வழங்கியுள்ளது எனவும், அதேபோல் உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும் இதன் பலன் கிடைக்கும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் பயணங்கள் தொடர்பான கூடுதல் நிபந்தனைகள் வரும் தினங்களில் அறிய முடியும். ஓமான் சுகாதரத்துறை அனுமதி வழங்கியுள்ள தடுப்பூசிகள் AstraZeneca / Covishield, AstraZeneca / Oxford, Pfizer / BioNTech, Sinovac, Sputnik V. ஆகியவை ஆகும்.