அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்கள் வழியாக அந்தந்த எமிரேட்களில் குடியுரிமை விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்
Image : Dubai Airport
அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களுக்கு இந்தியாவில் இருந்து பயணிக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு முக்கியமான அறிவிப்பு
அமீரகத்தில் கடந்த ஆகஸ்டு-5,2021 முதல் இந்தியர்கள் உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் பயண விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியர்கள் அமீரகத்திற்கு திரும்ப துவங்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிதாக வெளியிட்டுள்ள செய்தியில் அந்தந்த எமிரேட்ஸின் Validity விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்கள் வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய முடியும் என்று அறிவித்துள்ளது. அதாவது அபுதாபி விசா வைத்திருந்தால் அபுதாபி விமான நிலையம் வழியாகவும், துபாய் விசா வைத்திருந்தால் துபாய் விமான நிலையம் வழியாகவும் பயணிக்க முடியும், அதேநேரம் நாட்டின் மற்ற எமிரேட்டுகளின் பயணிகள் இந்த விமான நிலையங்கள் வழியாக பயணிக்க முடியாது. ஆனால் ஷார்ஜா மற்றும் ராஸ்-அல்-கைமா விமான நிலையங்கள் வழியாக எந்த எமிரேட்டின் விசா வைத்திருப்பவர்களும் பயணிக்க முடியும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளன.
தற்போது, அமீரகத்தின் அனைத்து எமிரேட்ஸுக்கு செல்பவர்களும் துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்குகின்றனர். அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முன்பு அபுதாபிக்கு ஆகஸ்ட்-10,2021 முதல் விமான சேவைளை தொடங்கும் என்று கூறியிருந்தது. இருப்பினும், எட்டிஹாட் ஏர்வேஸ் நேற்று(07/08/21) சனிக்கிழமை முதல் சென்னை, திருவனந்தபுரம்,கொச்சி, பெங்களூர் மற்றும் டெல்லியில் விமான நிலையங்களிலிருந்து அபுதாபிக்கு விமான சேவைகளைத் தொடங்கியுள்ளது. அதுபோல் துபாய்க்கு வருபவர்கள் GDRFA- யின் அனுமதியும், அபுதாபி உள்ளிட்ட பிற எமிரேட்கள் வருபவர்கள் ICA-யில் இருந்து அனுமதி பெற வேண்டும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இதை விதிமுறைகளை தான் எமிரேட்ஸ் உள்ளிட்ட பிற விமான நிறுவனங்களும் பின்பற்றுகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனவே அமீரகத்தின் எந்த எமிரெட்டுக்கு நீங்கள் வருகின்றீர்கள் என்பதை கணக்கில் கொண்டு அதற்கு பொருத்தமான விமானத்தில் மட்டுமே பயணச்சீட்டு முன்பதிவு செய்வது சிறந்ததாக இருக்கும். தற்போது அமீரகம் பயணிக்க அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் படிக்க இங்கே Click செய்யவும் https://www.arabtamildaily.com/2021/08/indian-travelers-arrived-directly-today-after-a-long-time-in-the-united-arab-emirates.html