குவைத்தில் நுழைய 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி தேவையில்லை என்று இந்திய தூதர் தகவல்
Image : இருவரும் சந்தித்த புகைப்படம்
இந்திய தூதர் மற்றும் குவைத் சுகாதாரத்துறையின் துணைச் செயலாளர் இருவரும் சந்திப்பு நடத்தினர்
குவைத் சுகாதாரத்துறை Undersecretary Mustafa Redha அவர்களுடன் இன்று(10/08/21) இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் நடத்திய சந்திப்பிற்கு பிறகு வெளியான அறிக்கையில் குவைத்திற்கு திரும்ப 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு கோவிட் தடுப்பூசி தேவையில்லை எனவும், இந்திய தொழிலாளர்கள் Upload செய்த தடுப்பூசி சான்றிதழ் Verification துரிதமாக நடைபெற்று வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் சான்றிதழ் QR-Code Scanning தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் அது சரிசெய்ய துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் Undersecretary தெரிவித்தார்.
குவைத்தில் உள்ள இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவது, குவைத் Validity Visa உள்ள இந்தியர்கள் விரைவில் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்குவது, இந்தியாவிலிருந்து குவைத்துக்கு நேரடியாக நுழைய தேவையான நடவடிக்கைகளை எளிதாக்குவது, இந்தியாவில் இருந்து சுகாதரத்துறையில் வேலைக்கு ஆள்சேர்ப்பு குறிப்பாக செவிலியர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது மற்றும் சுகாதாரத் துறையை மேலும் சிறந்த முறையில் மேம்படுத்துவது குறித்து இருவரும் இந்த சந்திப்பின் போது விவாதித்ததாக தெரிகிறது.