அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை இன்று புதன்கிழமை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறை சற்றுமுன் அறிவிக்கப்பட்டது
அமீரகத்தில் ஹிஜ்ரா ஆண்டை(Hijri 1443) அதாவது இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட்-12,2021 வியாழக்கிழமை பொதுவிடுமுறையாக இருக்கும் என்று மனித வளங்களுக்கான மத்திய ஆணையம்(FAHR) இன்று(04/08/21) புதன்கிழமை சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது. எனவே பெரும்பாலான நபர்களுக்கு வார இறுதி தினங்கள் உட்பட 3 நாட்கள் தொடர் விடுமுறையாக அமையும், மேலும் இஸ்லாமிய புத்தாண்டு ஆகஸ்டு-9 அல்லது 10 துவங்கவுள்ள நிலையில், அமீரகத்தில் இந்த விடுமுறை வியாழக்கிழமைக்கு மாற்றப்படுவதால், குடியிருப்பாளர்கள் இந்த மாதமும் மற்றொரு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை அனுபவிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.