BREAKING NEWS
latest

Monday, August 2, 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த மனிதாபிமான நிகழ்வு உலக மீடியாக்கள் மற்றும் செய்திதாள்கள் புகழ்ந்து செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளது

ஒலிம்பிக்கில் கத்தார் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்றது அனைவருக்கும் தெரியும்:ஆனால் தெரியாத மற்றொரு மனிதாபிமானம் அங்கே நிகழ்ந்தது

Image : அந்த நெகிழ்ச்சியான தருணம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த மனிதாபிமான நிகழ்வு உலக மீடியாக்கள் மற்றும் செய்திதாள்கள் புகழ்ந்து செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளது

கத்தார் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக நேற்று அடுத்தடுத்து இரண்டு தங்க பதக்கங்களை வென்றது. இதில் இரண்டாவது தங்கம் உயரம் தாண்டும் போட்டிக்கு கிடைத்தது. இது ஒலிம்பிக் போட்டி தொடர்பான செய்திகளை தொடர்ச்சியாக பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.... ஆனால் தெரியாத மற்றொன்று உள்ளது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை தான் முக்கியம் என்பதை நிரூபித்தார் கத்தார் வீரர் Mutaz Barshim அவர் தன்னுடன் போட்டியிட்ட இத்தாலி வீரர் Gianmarco Tamberi அவர்களுக்காக இந்த தியாகத்தை செய்தார்.

உயரம் தாண்டும் போட்டியின் கடைசி சுற்றில் இருவருமே ஒரே அளவில் உயரத்தை கடந்துள்ளனர். தொடர்ந்து நடுவர் இருவருக்கும் 3 வாய்ப்புகளை வழங்கினார் அதிலும் இருவருமே ஒரே உயரத்தை தாண்டினார். இந்த நேரத்தில் இத்தாலி வீரருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தங்க பதக்கம் யார்க்கு வழங்குவது என்பதை முடிவு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இத்தாலி வீரர் காயம் காரணமாக தண்ணால் இன்னும் உயரத்தை தாண்ட முடியாது என்று கூறியுள்ளார். இதை பார்த்த கத்தார் வீரர் Mutaz Barshim நானும் தாவாமல் இருந்தால் நீங்கள் பதக்கத்தை எப்படி வழங்குவீர்கள்.... அ‌ல்லது இந்த தங்க பதக்கத்தை இருவருமே பகிந்து கொள்ள விதிமுறைகள் எதுவும் உள்ளதாக என்று நடுவரிடம் கேட்டார்.

அதற்கு நடுவர் நீங்களும் தாவவில்லை என்றால் பதக்கம் பகிர்ந்து அளிக்கப்படும் என்றார். தனக்கு தங்கம் வெல்ல வாய்ப்பு இருத்தும் "அப்படியே செய்யுங்கள்" என்று ஒரு நொடிகூட யோசிக்காமல் அடுத்த நொடியே கூறவே அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதை கேட்டதும் கத்தார் வீரர் Mutaz Barshim அவர்களை இத்தாலி வீரர் கட்டியனைத்து தன்னுடைய நன்றி தெரிவித்து, மகிழ்ச்சி தாங்காமல் மைதானம் முழுவது அவர் சுற்றி வந்தார். போட்டி பொறாமை நிறைந்த இந்த உலகில் இப்படி ஒரு மனிதர என்று நேற்று முதல் உலக மீடியாக்கள் மற்றும் செய்திதாள்கள் அவரை புகழ்ந்து செய்தி வெளியிட்ட வண்ணமே உள்ளனர். கத்தார் இதுவரையில் நடைபெற்ற மொத்த ஒலிம்பிக் போட்டிகளும் சேர்த்து தன்னுடைய வரலாற்றில் இதுவரையில் நேற்று பெற்ற இரண்டு தங்கமும் சேர்த்து 7 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

Add your comments to டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த மனிதாபிமான நிகழ்வு உலக மீடியாக்கள் மற்றும் செய்திதாள்கள் புகழ்ந்து செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளது

« PREV
NEXT »