அமீரகம் செல்லும் பயணிகள் கவனத்திற்கு சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் விரைவு பி.சி.ஆர் பரிசோதனை வசதி உள்ளது
Image : திருச்சி விமான நிலையம்
அமீரகம் செல்ல தற்போது சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் Rapid-Test பரிசோதனை செய்ய முடியும்
இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு நேரடியாக செல்வதற்கான பயணத்தை நேற்று நீங்கிய நிலையில் அமீரகத்தில் இருந்து 2 டோஸ் தடுப்பூசி எடுத்து, Validity Work Permit உள்ளவர்கள் பிற பயண விதிமுறைகள் பின்பற்றி நேற்று(05/08/21) முதல் செல்ல முதல்கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அமீரகம் பயணிக்க அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விதிமுறைகளில் ஒன்று பயணத்திற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு விமான நிலையத்தில் வைத்து எடுக்கப்படும் விரைவு பி.சி.ஆர் பரிசோதனை(Rapid-Test). அதற்கான வசதி தமிழகத்தில் சென்னை விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது திருச்சி விமான நிலையத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே அமீரகம் செல்கின்ற பயணிகள் மற்ற பயண விதிமுறைகள் முடித்தால் விமான நிலையத்தில் வைத்து எடுக்கப்படும் Rapid-Test தொடர்பான கவலை கொள்ள வேண்டியது இல்லை.
சென்னை விமான நிலையத்தில் Rapid-Test எடுத்து 30 நிமிடத்தில் பரிசோதனை முடிவு கிடைக்கும் 4000 ரூபாய் கட்டணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் 1575 ரூபாய் கட்டணத்தில் 2 மணிநேரத்திற்குள் பரிசோதனை முடிவு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல் தமிழக-கேரளா எல்லைகளில் உள்ளவர்கள் திருவனந்தபுரம்,கொச்சி உள்ளிட்ட கேரளா மாநிலத்தின் 4 சர்வதேச விமான நிலையத்திலும் வைத்து Rapid-Test எடுக்கும் வசதிகளை அந்த மாநிலம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 3400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் அமீரக அதிகாரிகளின் அனுமதி உள்ளிட்ட மற்ற அனைத்து பயண விதிமுறைகள் முடித்த நபர்கள் அமீரகம் புறப்படுவதற்கு சாதாரணமாக 3 மணிநேரத்திற்கு முன்பு விமான நிலையம் வருவோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் Rapid-Test உள்ளிட்ட பரிசோதனைகள் உள்ளத்தால் 5 முதல் 6 மணி நேரத்திற்கு முன்னரே விமான நிலையத்திற்கு வருவது நல்லது. இதுவே அவசரம் எதுவும் இல்லாமல் விமான நிலையத்தில் உள்ள மீதி பயண விதிமுறைகளை முடிக்க வசதியாக இருக்கும்.