இந்தியாவில் இருந்து சவுதிக்கு நேரடியாக நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் நீங்கக்கூடும்;இது தொடர்பான சாதகமான அறிவிப்பு தூதரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
Image : சுற்றறிக்கை நகல்
இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு நேரடியாக நுழைவதற்கான தடை நீங்குவதற்கான அறிகுறிகள் வெளியாகியுள்ளது
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவில் நேரடியாக நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் நீங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வரும் நாட்களில் வெளியிடப்படும். சவுதி அரேபியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். பயணம் தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளின் தூதரகங்களுக்கு சவுதி வெளியுறவுத்துறை இது தொடர்பான அறிவிப்பை வழங்கியுள்ளது. தடுப்பூசி எடுக்காத மற்றவர்கள் விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் மிகச் சிலரே தடுப்பூசியின் இரண்டு டோஸ் முடித்து தற்போது சவுதி அரேபியாவில் உள்ளனர். ஆனால் இனிமேல், சவுதியில் இருந்து நாடு திரும்புவோருக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு சவுதி அதிகாரிகளிடமிருந்து இது தொடர்பான சுற்றறிக்கை தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.இந்திய தூதரகத்திற்கும் இது தொடர்பான அறிக்கை வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளன. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறோம் என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.