இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல இன்டிக்கோ விமானங்களுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை மீண்டும் நீக்கப்பட்டது
Image credit: Indigo Air
தடை நீக்கப்பட்டது,இந்தியாவில் இருந்து இன்டிக்கோ விமானங்களின் சேவை நாளை முதல் அமீரகத்திற்கு மீண்டும் இயக்கப்படும் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது
இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல இன்டிக்கோ விமானங்களுக்கு ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக தடை விதித்து அமீரக விமான போக்குவரத்து துறை(DGCA) இன்று(19/08/21) காலையில் உத்தரவை வெளியிட்டது. Rapid-Test எடுக்காமல் பயணியை அமீரகத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த முடிவு அடுத்தடுத்த தினங்களில் அமீரகம் திருப்புவதற்காக அனைத்து பயண நடைமுறைகளையும் முடித்து காத்திருக்கின்ற பயணிகளை பாதிக்கும் என்பதனால் மனிதாபிமான அடிப்படையில் நீக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த புதிய முடிவு வரும் நாட்களில் அமீரகம் திருப்புவதற்காக இன்டிக்கோ விமானங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகளுக்கு மிகவும் ஆறுதலான செய்தி ஆகும். முனுனர் தடை விதித்து இன்று காலையில் வெளியான செய்தியின் link: https://www.arabtamildaily.com/2021/08/the-uae-has-imposed-a-one-week-ban-on-indigo-flights-from-india-to-the-uae.html