BREAKING NEWS
latest

Sunday, August 29, 2021

இந்தியா சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சர்வதேச விமான தடையை மீண்டும் நீட்டித்துள்ளது

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை செப்டம்பர்-30 வரையில் நீட்டித்து சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது

Image : செய்தி பதிவுக்கான மட்டுமே

இந்தியா சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சர்வதேச விமான தடையை மீண்டும் நீட்டித்துள்ளது

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை தொடர்பான உத்தரவு கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஆகஸ்டு-31,2021 வரையில் தடை நீட்டிப்பதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் உலக நாடுகளில் பல இடங்களிலும் தற்போதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வாராத நிலையில் இந்தியாவில் இருந்து சாதாரணமாக இயக்கப்படும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகின்ற சர்வதேச விமானங்களுக்கான தடையை செப்டம்பர்-30-2021 நள்ளிரவு 23:59 வரையில் மீண்டும் நீட்டிப்ப்பாத DGCA இன்று(29/08/21) ஞாயற்றுக்கிழமை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடுள்ளது.

அதேநேரம் மீட்பு நடவடிக்கை உள்ளிட்ட அவசரகால அனுமதி அடிப்படையில் இயக்கப்படும் விமானங்கள், Air-Bubble ஒப்பந்தப்படி வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ள விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் ஆகியவற்றின் சேவைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்ளூர் விமான சேவைகளுக்கு கடந்த டிசம்பர் முதல் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்க அனுமதி வழங்கப்பட்டது. அதுபோல் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் உள்ளூர் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் கொரோனா தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால் பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்றும் இரு தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது குறிப்பிடதக்கது.

Add your comments to இந்தியா சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சர்வதேச விமான தடையை மீண்டும் நீட்டித்துள்ளது

« PREV
NEXT »