சவுதியில் உயிரிழந்த தமிழக நபரின் உடல் 5 மாதங்களுக்கு பிறகு சமூக சேவகர்களின் முயற்சி மூலம் தாயகம் அனுப்பப்பட்டது
Image : உயிரிழந்த சங்கரன் சண்முகம்(வயது-33)
ஐந்து மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்த இந்தியர் உடல் மீட்டு தாயகம் அனுப்பப்பட்ட துயரமான செய்தி வெளியாகியுள்ளது
சவுதி அரேபியாவில் உள்ள Wadi Al Dawasir பொது மருத்துவமனையில் ஐந்து மாதங்களாக வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு, கன்னியாகுமரி நாகர்கோவிலைச் சேர்ந்த சங்கரன் சண்முகம்(வயது-33) என்ற இளைஞரின் உடல் ரியாத்தில் இருந்து எத்திஹாட் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக சுலாவில் வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்த சண்முகம் கடந்த மார்ச்-18,2021 அன்று உயிரிழந்தார்.
தொடர்ந்து மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த உடலை மீட்டுத்தர குடும்பத்தினர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டனர். இதையடுத்து Sponsore-யின் உதவியுடன் உடலை தாயகம் அனுப்ப இந்த மாதம் ஆகஸ்ட் முதல் வாரத்தில், தூதரகத்தின் இறப்பு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிவின் அதிகாரிகள், ரியாத் இந்திய தூதரக சமூக ஆர்வலரும் மற்றும் ரியாத் மலப்புரம் மாவட்ட கேஎம்சிசி அமைப்பின் நலப்பிரிவு தலைவர் ரஃபீக் மஞ்சேரி அவர்களே உடலை திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகளை முடிக்க அணுகினர். இதன் முலம் சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு உடல் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த பல மாதங்களாக பல்வேறு முயற்சி செய்தும் தன்னுடைய குடும்பத்திலுள்ள ஒருவரின் உடலை மீட்க முடியாத நிலையில் உடலை தாயகம் அனுப்ப உதவிய அனைவருக்கும் ஞஉயிரிழந்த சண்முகம் அவர்களின் மைத்துனர் வீரநாராயணன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.