BREAKING NEWS
latest

Monday, August 2, 2021

குவைத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்று முதல் வெளிநாட்டினர் நுழைய துவக்கியுள்ளனர்

குவைத்தில் வெளிநாட்டினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் நுழைய துவங்கினர்;பல்வேறுபட்ட குழப்பங்களுக்கு வரும் நாட்களில் தெளிவான விடை கிடைக்கும்

Image : Kuwait Airport

குவைத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்று முதல் வெளிநாட்டினர் நுழைய துவக்கியுள்ளனர்

குவைத்தில் வெளிநாட்டினருக்கான நுழைவு அனுமதி நடைமுறைக்கு வந்த முதல் நாளான நேற்று சான்றிதழில் உள்ள தவறுகள் காரணமாக பல பயணிகள் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. பிரிட்டனில் இருந்து நேற்று தனது மனைவியுடன் குவைத் விமான நிலையத்திற்கு வந்த பொறியாளர் இமாத் ஜஹ்ரானின் மனைவிக்கு விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியவில்லை என்று அல்-ராய் தினசரி நாளிதழ் தெரிவித்துள்ளது. லண்டனில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசியை முடித்த பிறகு அவரும் அவரது மனைவியும் குவைத் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் உலகளாவிய அங்கீகாரம் உள்ள பார்கோடு உள்ள சான்றிதழ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட Health Passport உள்ளிட்டவையும் வைத்திருந்தனர். இருப்பினும், குவைத்தில் நுழைவதற்கான செயல்முறையை முடிக்க விமான நிலையத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக செலவழிக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார். இறுதியில், அவர் குவைத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவரது மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தன்னுடைய தடுப்பூசி சான்றிதழக்கு முன்பு குவைத் சுகாதரத்துறை அமைச்சகத்தால் முன்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

ஆனால் அவரது மனைவியின் தடுப்பூசி சான்றிதழ் ஒப்புதலுக்காக கடந்த ஜூலை 17 அன்று குவைத் சுகாதரத்துறை வெளியிட்டுள்ள தளத்தில் பதிவு செய்து காத்திருந்தாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக தனது மனைவியை மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும் என்றும் ஜஹ்ரான் கவலை தெரிவித்தார். இதே காரணத்திற்காக குவைத் விமான நிலையத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பூசி சான்றிதழ் பெற்ற 14 க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில் இந்தியர்கள் குவைத்தில் நுழைவது குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று நேரடியாக விமானம் இல்லாத நிலையில் மற்றொரு நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்த பிறகுதான் குவைத்தில் நுழைவு அனுமதிக்கப்படும் என்றும், குவைத் வந்தவுடன் மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும் என்ற விதத்தில் பரப்பப்படுகின்றன.

ஆனால் குவைத் சிவில் ஏவியேஷன் தனது சமீபத்திய அறிவிப்பை( Latest Travel Update) இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்காக நேற்று முன்தினம்(31/07/21) நள்ளிரவில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் அத்தகைய நிபந்தனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குவைத் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் யூசுப் அல் ஃபவுஸான், ஜூலை-30,2021 அன்று இந்திய தூதரகத்தில் நடந்த நிகழ்வின் போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் நேரடியாக விமான சேவை இல்லாத நிலையில் குவைத் சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள பயண நிபந்தனைகளை முடித்த பிறகு மூன்றாவதுநாடு வழியாக குவைத்துக்குள் நுழையலாம் என்றும், மேலும் Transit நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்றும் விளக்கியிருந்தார். மேலும் இந்தியாவில் இருந்து நேரடியான பயண அனுமதி விரைவில் வழங்கபடும் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார். அதுபோல் குவைத் விமான அதிகாரிகள் இதற்கு மாறாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் நீங்கள் பதிவேற்றிய தடுப்பூசி சான்றிதழ் குவைத் இம்யூன்-ஆப் மூலம் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் குவைத் விமான நிலையம் வெளிநாட்டினர் நுழைய நேற்று(01/08/21) முதல் திறக்கப்பட்ட நிலையில் இந்தியர்களின் குவைத் வருகை தொடர்பான குழப்பங்கள் குறித்து வரும் நாட்களில் கூடுதலான தெளிவு கிடைக்கும். அதுவரை காத்திருப்பது சிறந்தது என்று விமானத்துறை மற்றும் டிராவல் ஏஜென்ஸி துறையில் வேலை செய்பவர்களும் சொல்கிறார்கள்.

Add your comments to குவைத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்று முதல் வெளிநாட்டினர் நுழைய துவக்கியுள்ளனர்

« PREV
NEXT »