இந்தியா உட்பட 6 நாடுகளைச் சேர்ந்தவர்களின் நேரடி நுழைவு நடைமுறைப்படுத்தல் குறித்து குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று காலை நடைபெறும்
Image : KuwaitCity
குவைத்திற்கு இந்தியர்கள் உள்ளிட்டவர்களின் நேரடியான வருகை குறித்த சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று காலை நடைபெறும்
இந்தியா உள்பட 6 நாடுகளில் இருந்து குவைத்துக்கு நேரடியாக நுழைவதற்கு அமைச்சரவை முடிவை செயல்படுத்துவது குறித்து குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளின் அவசர கூட்டம் இன்று(22/08/21) ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 18-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளத்தில் இருந்து குவைத்துக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இருந்தாலும் நேற்றுவரை விமான நிலைய அதிகாரிகளுக்கு இது தொடர்பாக எந்த அரசாங்க நிறுவனத்திடமிருந்தும் இறுதி அறிவிப்பு வரவில்லை.
மேலும், விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை. இந்த நிலையில்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளின் அவசர கூட்டம் இன்று கூட்டுகின்றனர். அதே நேரத்தில், சீன மற்றும் ரஷ்யா நாடுகளின் தடுப்பூசிகளைப் எடுத்துக் கொண்டவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் அமைச்சரவை முடிவு குறித்து விமான அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த தடுப்பூசிகளைப் எடுத்துக்கொண்ட சில வளைகுடா நாடுகளில் இருந்து குவைத் விமான நிலையத்திற்கு வந்த அந்நாட்டு குடிமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பயணிகள் வருகை குறித்து குவைத் விமான நிலைய அதிகாரிகளின் அறிவிப்பு வெளியாகாத நிலையில் சில விமான நிறுவனங்கள் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கவில்லை. இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் குவைத்தில் நுழைய விதிமுறைகள் அறிய இங்கே படிக்கலாம் Cilck: https://www.arabtamildaily.com/2021/08/welcome-back-to-kuwait-from-august-22.html