குவைத்தில் விமான சேவை ரத்து செய்யபட்ட நிலையில் பயணிக்கு 2.4 லட்சம் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவு
பாதிக்கப்பட்ட பயணிக்கு இழப்பீடாக 1000 தினார்கள் வழங்க குவைத் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குவைத் திரும்புவதற்காக இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த நிலையில் தாயகம் சென்ற வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் திரும்புவதற்கான தேதியில் விமானம் திடிரென ரத்து செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பயணி குவைத் திரும்பிய பிறகு தனக்கு நஷ்டஈடு வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பயணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 2.4 லட்சம்(1000 தினார்கள்) நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிரபல வணிக விமான நிறுவனத்திற்கு குவைத் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் எகிப்து நாட்டவர் என்பதும், எகிப்தின் சோஹாகில்(Sohag) இருந்து குவைத் திரும்புவதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு விமான நிறுவனம் அந்த விமான சேவையை திடிரென ரத்து செய்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் இந்த முடிவை எடுத்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது.