அமீரகத்தில் இருந்து கொரோனா காரணமாக உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் தாயகம் கொண்டு வருகின்ற நடவடிக்கை தொடங்கியது
Image : செய்தி பதிவுக்கான மட்டுமே
அமீரத்தில் இருந்து கொரோனா காரணமாக உயிரிழக்கும் இந்தியர்களின் உடல்கள் தாயகம் அனுப்ப முடியும்
உலகில் கொரோனா காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் அந்தந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில்,ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்கள் உயிரிலும் மேலான குடும்ப உறுப்பினர் உடலை கடைசியாக ஒருமுறை பார்க்க முடியாத பெரும் துயரமான நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரியில் அமீரகம் சுகாதார விதிமுறைகளில் சில தளர்வுகளை அறிவித்தது. இதன்படி கொரோனா காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அவர்களின் தாய்நாட்டிற்கு எடுத்துச்செல்ல முடியும். ஆனால் இந்தியாவுக்கு அமீரகத்தில் இருந்து உடல்கள் எடுத்துவர சில தடைகள் இருந்த நிலையில் நேற்று(17/08/21) முதல் இந்தியர்களின் உடல்கள் தாயகம் அனுப்ப முடிகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இறந்த நபர் எந்த மாவட்டத்தை சேர்ந்தவரோ அந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியின் முன்அனுமதி(NOC) பெற வேண்டும், பிறகு இந்த சான்றிதழை சமர்பித்து இறந்தவரின் உடலை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தாயகம் அனுப்ப முன்வருகிற பிரதிநிதிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அமீரக சுகாதரத்துறை அனுமதி வழங்கியுள்ள 7 ஏஜென்சிகள் வழியாக இறந்த உடலை தாயகம் அனுப்ப முடியும். இதற்காக அந்த ஏஜென்சி நிறுவனங்கள் இறந்தவரின் உடல் மற்றும் சவப்பெட்டி உள்ளவை Sterilisation செய்து பாதுகாப்பாக அனுப்புவார்கள். கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட உடல் என்பதால் எம்பாமிங் செய்ய முடியாது. எனவே இந்த உடல்கள் 10 முதல் 14 மணிநேரம் வரையில் மட்டுமே பாதுகாக்க முடியும். எனவே விரைவாக நேரடியான விமானத்தில் உடலை தாயகம் அனுப்ப வேண்டிய நிலை ஏற்ப்படும். மேலும் உடலை தாயகம் கொண்டு சென்ற சிறிது நேரத்தில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் இறந்த நபர்களின் குடும்பத்தினர் முன்கூட்டியே அனைத்து முன்னேற்பாடு செய்ய வேண்டும்.
இதற்கிடையே குவைத்தில் இறக்கும் இந்தியர்களின் உடல்கள் இலவசமாக தாயகம் அனுப்பி வைக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று குவைத் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. Sponsor செலவுகளை ஏற்க மறுக்கும் போதோ அல்லது இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் செலவுகளை குடும்பத்தினரால் செலுத்த முடியாத நிலையில் இந்த சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரக அலுவலகத்தின் இறப்பு தொடர்பான சிறப்பு பதிவு கவுண்டரில் உதவி பெற விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் முடிவு அறிவிக்கப்படும். மேலும் இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் குவைத் இந்திய தூதரகத்தின் WhatsApp எண்ணை தொடர்பு கொள்ளலாம்(+965 65505246) அல்லது cw2.kuwait@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் விபரங்களை பெற முடியும்.