துபாயில் பூனையை காப்பாற்றிய வீடியோவில் இருந்து 4 ஹீரோக்களுக்கு ஆட்சியாளர் ஷேக் முகமது 50000 திர்ஹம் பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார்
Image : பூனையை காப்பாற்றிய 4 பேர்
துபாய் ஆட்சியாளர் இந்தியர்கள் உள்ளிட்ட நான்கு ஹீரோக்களுக்கு பரிசுத்தொகையை வழங்கி கவுரவப்படுத்தினார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர்,பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவருகள் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சிக்கிய கர்ப்பிணிப் பூனையை மீட்பதற்காக இரண்டு இந்தியர்கள் உட்பட நான்கு வெளிநாட்டவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார். நான்கு பேருக்கும் தலா இந்திய ரூபாய் மதிப்பில் 10 லட்சம்(திர்ஹம் 50,000) வழங்கப்பட்டது. இந்தியா, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த RTA பஸ் டிரைவர் நசீர் முகமது, முகமது ரஷீத் மற்றும் பூனையை காப்பாற்றிய அருகிலுள்ள மளிகைக் கடையின் உரிமையாளர், மொராக்கோவைச் சேர்ந்த அஷ்ரப் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிஃப் மஹ்மூத் ஆகியோருக்கு பூனையை மீட்பதற்காக இந்த பரிசு வழங்கப்பட்டது. நேற்றிரவு ஆட்சியாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு மூத்த அதிகாரி நேரடியாக வந்து பரிசு வழங்கினார்.
இந்த மாதம் 24-ஆம் தேதி காலை 8 மணியளவில் கர்ப்பிணிப் பூனையை தெய்ரா ஃபிஜ் முராஜ் பகுதியில் இருந்து இவர்களால் மீட்கப்பட்டது. பக்கத்து வீட்டில் வசிக்கும் நசீர் முகமது,அஷ்ரப் மற்றும் அதிஃப் ஆகியோர் இரண்டாவது தளத்தில் சிக்கியிருந்த பூனையை ஒரு பெரிய படுக்கை விரிப்பை பயன்படுத்தி சமயோசிதமாக யோசித்து துரிதமாக செயல்பட்டு கீழே குதிக்க வைத்து மீட்டனர். இவர்கள் இதை செய்வது அந்த குடியிருப்பின் எதிரிலுள்ள மளிகை கடை நடத்தி வரும் அப்துல் ரஷீத் என்ற இளைஞர் தற்செயலாக வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகியது. இதையடுத்து இந்த வீடியோ ஷேக் முகமது அவர்களின் கவனத்திற்கு வந்த நிலையில் நான்கு பேர் கொண்ட அந்த குழுவின் பணியைப் பாராட்டி வீடியோவை ட்வீட் செய்தார்.
மேலும் இவர்களை நீங்கள் யாராவது பார்த்தால் வாழ்த்து கூறுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இந்த மனிதாபிமான செயலை செய்த 4 பேரையும் பற்றிய தகவல்களை சேகரித்தனர். மேலும் அந்த கர்ப்பிணியான பூனையை கூடுதல் பராமரிப்புக்காக மீட்டுச் சென்றனர். சில வருடங்களுக்கு முன்பு ஆட்சியாளர் கார் மீதி குருவி ஒன்று கூடுகட்டி முட்டை போட்டிருந்த நிலையில் சில வாரங்களுக்கு வாகனத்தை எடுக்காமல் குஞ்சு பொரியும் வரையில் பொறுமை காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பூனை காப்பாற்றப்பட்ட வீடியோ Link:https://m.facebook.com/story.php?story_fbid=1207292176439698&id=194194777749448