குவைத்தில் நுழைய தடை நீக்கப்பட்ட நிலையில் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ளுங்கள்:
Image : KuwaitCity
குவைத்தில் நுழைய தடை நீக்கப்பட்ட நிலையில் பயணிகள் நேரடியாக நுழைய தேவையான அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விதிமுறைகள்
இந்தியா,இலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து விமானங்கள் ஆகஸ்டு-22,2021 முதல் நேரடியாக இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கோவிட் அவசரக் குழு நிர்ணயித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டே நாட்டில் நுழைய முடியும். அரசாங்க தகவல் தொடர்பு துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட விதிமுறைகள் பின்வருமாறு:
குவைத் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர், அஸ்ட்ராஜெனேகா /கோவ்ஷீல்ட், மோடெனா, ஜான்சன் & ஜான்சன் (ஒரு டோஸ்) தடுப்பூசிகளில் ஒன்றைப் நாட்டிற்கு நுழையும் பயணி கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும்.( Note:இதில் அஸ்ட்ராஜெனேகா தான் இந்தியாவில் கோவ்ஷீல்ட் என்ற பெயரில் வழங்கபடுகிறது). மேலும் குவைத்தால் அங்கீகரிக்கப்படாத சினோஃபார்ம், ஸ்புட்னிக் மற்றும் சினோவாக் தடுப்பூசி போடப்பட்டவர்கள், குவைத்தில் நுழைய அங்கீகரிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட தடுப்பூசிகளில் எதாவது ஒரு டோஸை மூன்றாவதாக பூஸ்டர் டோஸ்யாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் குவைத்திலிருந்து தடுப்பூசி எடுத்து தாயகம் சென்றுள்ள நிலையில் அவர்கள் குவைத் திரும்ப இம்யூன்-ஆப் அல்லது மொபைல் ஐடி செயலியை பதிவிறக்கம் செய்யும் போது Green Signal காட்ட வேண்டும்.
குவைத்துக்கு வெளியே தடுப்பூசி போடப்பட்டவர்கள் அவர்களின் பாஸ்போர்டில் உள்ளவாறு பொருந்திய பெயர், தடுப்பூசி பெயர், தடுப்பூசி தேதி, தடுப்பூசி போடப்பட்ட இடம் மற்றும் ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடு ஆகியவை அடங்கிய தடுப்பூசி சான்றிதழை பயணத்தின் போது எடுத்துச் வர வேண்டும். QR குறியீட்டை ஸ்கேனிங் செய்ய முடியவில்லை என்றால் சான்றிதழை சுகாதார அமைச்சகத்தின் பின்வரும் இணைய இணைப்புக்கு சென்று https://vaxcert.moh.gov.kw/SPCMS/PH/CVD_19_Vaccine_Extern_Registration.aspx இல் பதிவேற்றி அதற்கு அங்கீகராம் பெற வேண்டும். மேலும் மீதியுள்ள நிபந்தனைகள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பிரிவினர்:
- தடுப்பூசி முடித்த குடிமக்கள் மற்றும் இகாமா உள்ள வெளிநாட்டினர்
- 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் எதிர்மறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
- ஸ்லோனிக் ஆப்பில் Registration செய்ய வேண்டும்
- ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல்(PCR பரிசோதனை செய்து எதிர்மறை என்று நிரூபிப்பதன் மூலம் தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிக்க முடியும்)
இரண்டாவது பிரிவினர்:
- அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி முடித்து புதிய விசாவில் வருகின்றவர்கள்(இதற்கான அர்த்தம் சிவில் ஐடி எண் பெறாதவர்கள்)
- 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் எதிர்மறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
- நீங்கள் வந்த பிறகு குவைத்திலிருந்து சிம் கார்டை எடுத்து ஷ்லோனிக் பயன்பாட்டு செயலியை பதிவிறக்கம் செய்வதாக ஒப்புதல் அளிக்க வேண்டும்
- ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல்(PCR பரிசோதனை செய்து எதிர்மறை என்று நிரூபிப்பதன் மூலம் தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிக்க முடியும்)
- அதேபோல் குவைத் வந்து 24 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனை செய்யப்பட வேண்டும்
மூன்றாவது பிரிவினர்:
- தடுப்பூசி போடப்படாத நபர்கள் ஆனால் குவைத் அதிகாரிகளின் சிறப்பு அனுமதி பெற்றவர்கள்
- 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் எதிர்மறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
- ஸ்லோனிக் ஆப்பில் Registration செய்ய வேண்டும்
- ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தல்(institutional quarantine )
- அதன் பிறகு ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல்
- குவைத் வந்த முதல் மற்றும் ஆறாவது நாளில் PCR பரிசோதனை செய்ய வேண்டிய கட்டணத் தொகையை குவைத் வருவதற்கு முன் குவைத் முசாபர் ஆப் மூலம் செலுத்த வேண்டும்.
நான்காவது பிரிவினர்:
- அதே நேரம் தடுப்பூசி போடாத Article-20(விசா எண்-20) அதாவது வீட்டுத் தொழிலாளர்கள் விசாவில் வருபவர்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகளில் இருந்துவிலக்களிக்கப்படுகிறார்கள் ஆனால் அவர்களது முதலாளிகள் அவர்களை அழைத்துவர Belsalamah platform யில் பதிவு செய்ய வேண்டும்.
Kuwait Airport | Return Kuwait | August 22