BREAKING NEWS
latest

Tuesday, September 7, 2021

குவைத்திற்கு தினசரி விமான சேவை இன்று முதல் துவக்கம்;விமான பயணச்சீட்டு கட்டணம் வரும் நாட்களில் வெகுவாக குறையும்

இந்தியாவிலிருந்து இன்று நேரடியாக பல விமானங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குவைத்திற்கு வந்திறங்குவார்கள்

Image : Own Design

குவைத்திற்கு தினசரி விமான சேவை இன்று முதல் துவக்கம்;விமான பயணச்சீட்டு கட்டணம் வரும் நாட்களில் வெகுவாக குறையும்

இந்தியாவில் இருந்து இம்மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் கொச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து jazzra Airway-யின் சில chartered விமானங்கள் வந்ததை தவிர்த்து பெரிதாக நேரடியாக விமானங்கள் எதுவும் பயணிகளுடன் குவைத் வாராத நிலையில் நாளை புதன்கிழமை முதல் ஏர் இந்தியா விமான சேவைகளை இயக்கும் என்ற செய்தியை இந்திய தூதர் நேற்று வெளியிட்டிருந்த நிலையில் இன்று(07/09/21) பயணிகளுடன் பல நேரடியான விமானங்கள் காலை முதல் குவைத்தில் பறந்து இறங்கும் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது.

இதன் மூலம் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே வழக்கமான இருபுற விமான சேவை இன்று முதல் துவங்குகிறது. இதன்படி கொச்சியில் இருந்து ஜசீரா ஏர்வேஸ் விமானம் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு குவைத் விமான நிலையம் வந்திறங்கும். தொடர்ந்து மும்பையிலிருந்து காலை 6.05 மணிக்கும், சென்னையில் இருந்து காலை 6.15 மணிக்கும் குவைத் ஏர்வேஸ் விமானங்கள் புறப்படும். மேலும் டெல்லியில் இருந்து காலை 7.40 மணிக்கு ஜசீரா ஏர்வேஸ் விமானமும், மும்பையில் இருந்து காலை 9.20 மணிக்கு ஏர் இந்தியா விமானமும் புறப்படும். அதேநேரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் விமானம் கொச்சியில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும், தொடர்ந்து அகமதாபாத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும் புறப்படும் இத்துடன் இந்தியாவில் இருந்து இன்றைய(07/09/21) தினத்தில் இயக்க திட்டமிட்டுள்ள விமான சேவைகள் முடிவடையும்.

இதற்கிடையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான கட்டணத்தை கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் இருந்து குவைத்துக்கு 245 தினார் கட்டணம் ஆகும். புதிய விகிதம் கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட குறைந்தது 3 மடங்கு அதிகம் ஆகும். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் இது மற்ற விமான நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டண விகிதத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே, இது சாதாரண வெளிநாட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கான முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அனைத்து இருக்கைகளும் விற்று தீர்ந்துவிட்டன. ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு மூலம் வரும் நாட்களில் மற்ற விமான நிறுவனங்களும் குறைந்த கட்டணத்தை அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும் என்று பயணத் துறையில் வேலை செய்பவர்கள், ஏஜென்சி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். எனவே அவசர தேவையில்லாதவர்கள் இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருந்து குவைத் திரும்பினால் டிக்கெட்டுகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comments to குவைத்திற்கு தினசரி விமான சேவை இன்று முதல் துவக்கம்;விமான பயணச்சீட்டு கட்டணம் வரும் நாட்களில் வெகுவாக குறையும்

« PREV
NEXT »