BREAKING NEWS
latest

Monday, September 13, 2021

கோவிட் தடுப்பூசி எடுக்காத 18 வயதிற்கும் குறைவான வெளிநாட்டினர் குழந்தைகளை குவைத்துக்குள் நுழைய அனுமதி

குவைத்தில் இந்தியர்கள் நுழைய தடை நீங்கிய பிறகு ஒரே வாரத்தில் 7,582 பேர் நாட்டில் நுழைந்துள்ளனர்

Image : Kuwait Airport

கோவிட் தடுப்பூசி எடுக்காத 18 வயதிற்கும் குறைவான வெளிநாட்டினர் குழந்தைகள் குவைத்துக்குள் நுழைய அனுமதி

குவைத்திற்கு இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை துவங்குவதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கடந்த வாரம் அனுமதி வழங்கிய நிலையில் சுமார் 17 மாதங்களுக்கு பிறகு இந்திய பயணிகள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நாட்டில் நுழைந்து வருகின்றனர். இந்நிலையில் விமான சேவை துவங்கப்பட்ட பின்னர் ஒரே வாரத்தில் 174 நேரடி பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. இதில் எகிப்து நாட்டில் இருந்து 89 பயணிகள் விமானங்களும், இந்தியாவிலிருந்து 85 பயணிகள் விமானங்களும் இயக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர்-5,2021 முதல் 11 வரையிலான காலகட்டத்தில் இந்த விமானங்களின் மூலம் குவைத்திற்குள் நுழைந்த பயணிகளின் மொத்த எண்ணிக்கை 17,843 ஐ எட்டியுள்ளது. அதேபோல் எகிப்தில் இருந்து 10,261 விமான பயணிகளும், இந்தியாவில் இருந்து 7,582 விமான பயணிகளும் குவைத்தில் நுழைந்துள்ளனர் என்ற புள்ளிவிபர கணக்குகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே கோவிட் தடுப்பூசி எடுக்காத 18 வயதிற்கும் குறைவான வெளிநாட்டினர் குழந்தைகள் குவைத்துக்குள் நுழைய அனுமதிக்கும் முடிவு தொடர்பான அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் இன்று(13/09/21) மாலையில் வெளியிட்டுள்ளனர்.நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சலுகை ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் நாட்டிற்கு வந்த பிறகு முன்னர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி ஹோட்டல் தனிமைப்படுத்தல் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தல் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல் குவைத்தில் நுழைந்த பிறகு தடுப்பூசி எடுத்துக்கொள்வோம் என்ற உறுதிமொழி பத்திரத்தையும் அளிக்க வேண்டும். தடுப்பூசி எடுக்காத 18 வயதிற்கும் குறைவான வெளிநாட்டினர் குழந்தைகளை குவைத்துக்குள் நுழைய அனுமதிக்கும் முடிவுக்கு கடந்த வாரம் குவைத் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில் இன்று அனுமதி அளித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பாக கடந்த வாரம், இந்திய தூதர் சிபி ஜார்ஜ் குவைத் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. குவைத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுக்கும் நடவடிக்கைகள் துவங்காத நிலையில் தடுப்பூசி எடுக்காத காரணத்தால் தாயகத்தில் சிக்கியுள்ள இந்திய குழந்தைகள் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் குவைத் திரும்ப முடியும்.

Add your comments to கோவிட் தடுப்பூசி எடுக்காத 18 வயதிற்கும் குறைவான வெளிநாட்டினர் குழந்தைகளை குவைத்துக்குள் நுழைய அனுமதி

« PREV
NEXT »