அபுதாபி எமிரேட்டில் நுழைவதற்கான கோவிட் பரிசோதனை இனிமுதல் தேவையில்லை என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
Image : அபுதாபி சிட்டி
அபுதாபியில் நுழையும் சர்வதேச பயணிகளுக்கும் நாளை முதல் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன
அபுதாபி எமிரேட்டில் நுழைவதற்கான கோவிட் பரிசோதனை இனிமுதல் தேவையில்லை என்று புதிய அறிவிப்பு இன்று(19/09/21) சனிக்கிழமை சற்றுமுன் நாட்டின் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை நாளை, அதாவது செப்டம்பர்-19, 2021 ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறையில் வருகின்றன. இதன்படி கோவிட் பரிசோதனை தொடர்பான எந்தவிதமான சான்றிதழும் அளிக்காமல் நாட்டை விட்டு(அமீரகத்தை) வெளியேறாமல் அபுதாபியில் எந்த எமிரேட்டில் இருந்தும் கோவிட் தொற்று நாட்டில் கண்டறிவதற்கு முன்பு இருந்ததைப் போல சாதாரணமாக நுழைய முடியும். அபுதாபியில் சோதனை நேர்மறை விகிதம் 0.2 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு சர்வதேச பயணிகளுக்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன, அதில் சர்வதேச நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் மற்றும் நேர்மறை(Positive) கண்டறியப்படும் நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் Wristbands பயன்படுத்தாமல் வீட்டு தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் நேர்மறை(Positive) கண்டறியப்படும் நபர் தற்போதுள்ள நடைமுறைப்படி தொடர்ந்தும் கண்டிப்பாக Wristbands அணிந்து வீட்டு தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும் இந்த முடிவும் 19 செப்டம்பர் 2021 ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. அதேபோல் கோவிட் பரிசோதனைகளும் தனிமைப்படுத்தல் காலத்தில் முறைப்படி அந்தந்த நாட்களில் செய்துக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக சுகாதார அமைச்சகத்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கண்காணிப்பது உள்ளிட்டவை செய்யப்படும், மீறுபவர்கள் மீதான புகார்கள் அட்டர்னி ஜெனரலுக்கு தெரிவிக்கப்படும்.
Search_tags