குவைத்தின் வடகிழக்கில் இன்று 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது
Image : அதிகாரப்பூர்வ அமைச்சகம்
குவைத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
குவைத்தில் இன்று(19/09/21) சனிக்கிழமை தேசிய நில அதிர்வு வலையமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் நாட்டின் வடகிழக்கில் ரவ்தடைன்(Rawdatain) பகுதியில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:18 மணிக்கு நிலத்தடியில் 7 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது முறையாக சிறிய அளவிலான நிலநடுக்கம் நாட்டில் தொடர்ந்து பதிவாகியுள்ளன. கடந்த ஆகஸ்டு-23,2021 நாட்டின் தென்மேற்கில் Manaqeesh பகுதியல் ரிக்டர் அளவுகோலில் 2.9 அளவிலான நிலநடுக்கமும், அதேபோல் இதே ஆகஸ்டு-02,2021 அன்று அதே Manaqeesh பகுதியல் ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூக்கத்தில் இருந்ததால் யாரும் உணர்ந்திருக்க வாய்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.