குவைத் விஸ்மயா இன்டர்நேஷனல் ஆர்ட்ஸ் ஆன்ட் சோசியல் சர்வீஸ் அமைப்பு சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது
குவைத் விஸ்மயா அமைப்பு சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது;150 பேர் வரையில் இரத்ததானம் செய்தனர்
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் மற்றும் இந்தியா-குவைத் இராஜந்திர உறவுகளின் 60-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த தருணத்தில் விஸ்மயா அமைப்பு சார்பில் ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த மனிதாபிமான நிகழ்சியினை அமைப்பின் தலைவர் அஜித்குமார் மற்றும் இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் ஹெச்.இ.கமல் சிங் ரத்தோர் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
குவைத்தில் உள்ள டிவிஎஸ் குழுமம், புகழ்பெற்ற மருத்துவமனையான பதர்-அல்-சமா, மலபார் கோல்ட் மற்றும் தக்காரா ஹோட்டல்களின் ஸ்பான்சர்ஷிப்பில் விஸ்மயா இதை ஏற்பாடு செய்தது. இரத்த தான முகாமில் 100 க்கும் மேற்பட்டவர்கள் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்ய முன்வந்த அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
குவைத் விஸ்மயா இன்டர்நேஷனல் கலை மற்றும் சமூக சேவை அமைப்பின் Chairman திரு.பி.நாயர்,இயக்குநர்கள் பாபுஜி பத்தேரி, மனோஜ் மாவேலிக்கரா, பொருளாளர் ஜியேஷ் அப்துல் கரீம், இணை செயலாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ஸ்ரீகுமார்,இணைச் செயலாளர் திரு.மது மஹி, துணைத் தலைவர் ஜியோ மத்தாய், துணைத் தலைவர் சுமேஷ், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பினொய் முட்டம், சரண்யா மற்றும் சுஜமது ஆகியோர் தலைமை வகித்தனர்.
மேலும் TVS குழு மேலாளர் ஃபெரோஸ் கான், டாக்டர். சுமத் மிஸ்ரா, Badr Al Samaa மருத்துவமனை இணை மேலாளர் ரசாக், Thakkara உணவகத்தின் பிரதிநிதி அப்துல் ரஷீத் ஆகியோருக்கு இரத்த தான முகாமில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிர்வாக உறுப்பினர்களான வனஜா, அனு, ஜலீல், சுஜித் மற்றும் நசீர் ஆகியோரும் ரத்த தான முகாமில் கலந்து கொண்டனர். நிகழ்வில் பொருளாளர் ஜெயேஷ் அப்துல் கரீம் இரத்ததானம் வழங்கிய மற்றும் முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.