குவைத் சர்வதேச விமான நிலையத்தின் முனையங்களில் பயணிகள் சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
Image : Kuwait Airport
புதிய தொழில்நுட்ப மூலம் போர்டிங் பாஸ் போன்ற அனைத்து சேவைகளையும் ஊழியர்களின் உதவியின்றி பயணி சுயமாக செய்ய முடியும்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் முனையங்களில் பயணிகள் தொடர்புடைய சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளன. இதற்காக, சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் 14.4 மில்லியன் தினார்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளனர். புதிய தொழில்நுட்பம் பாதுகாப்பு தொடர்பான எல்லைக்குள் மட்டுமே நின்றுவிடாமல், பயணியின் உடமைகள், பாஸ்போர்ட் பதிவு உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் நாட்டிற்கு வரும் மற்றும் புறப்படும் பயணிகளின் போர்டிங் பாஸ் போன்ற அனைத்து சேவைகளையும் ஊழியர்களின் உதவியின்றி சுயமாக செய்ய முடியும்.
மேலும் விமான நிலையத்தில் மின்னணு வாயில்கள் நிறுவுதல் உள்ளிட்ட நவீன வசதிகளும் இதில் அடங்கும். இது தவிர, விமான நிலையத்தின் வழியாக நாட்டிற்குள்(குவைத்தில்) நுழைய தடை விதிக்கப்பட்ட பயணிகள் புறப்படுகிறார்களா என்பதை புதிய தொழில்நுட்ப அமைப்பு பயணி எந்த நாட்டில் இருந்து புறப்பட தயார் ஆகின்றாரோ அந்த இடத்திலேயே கண்டறிந்து தடுப்பதையும் இதன் மூலம் சாத்தியமாக்கும். பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட முறையிலேயே இந்த அமைப்புகள் செயல்படும் என்பது கூடுதல் சிறப்பாகும்.