குவைத்தில் வேலைக்காக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைவிட அதிகமாக செலுத்த வேண்டாம்;தூதர் சிபி ஜார்ஜ் அறிவுத்தல்
Image : குவைத் இந்திய தூதர்
குவைத்துக்கான செவியர் ஆட்சேர்ப்புக்கு,மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைவிட அதிகமாக செலுத்த வேண்டாம் - தூதர் சிபி ஜார்ஜ்
குவைத்தில் செவிலியர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் நபர்களை பற்றி இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். செவிலியர்கள் குவைத்திற்கு வேலைக்காக வருவதற்கான கட்டணமாக இந்திய அரசு முப்பதாயிரம் ரூபாய் மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி மட்டுமே எனவும், இதற்கு மேல் ஒரு பைசாவுக்கு யாரும் செலுத்தக் கூடாது எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது லஞ்சம் எனவும், லஞ்சம் பெறுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். "இந்தியாவில் இருந்து செவிலியர் ஆட்சேர்ப்பு" என்ற தலைப்பில் இந்திய தூதரகம் நேற்று(29/09/21) ஏற்பாடு செய்த திறந்த இல்லத்தில்(Open House) நிகழ்ச்சியில் தூதர் இதை மீண்டும் வலியுறுத்தினார். அதேபோல் குவைத் அதிகாரிகள் நர்சிங் ஆட்சேர்ப்பு கட்டணமாக ஒரு பைசா கூட வசூலிக்கவில்லை எனவும் இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், இது தொடர்பாக தான் குவைத் சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் பிற இது தொடர்புடைய அதிகாரிகளை பலமுறை சந்தித்து பேசியுள்ளேன் என்றார். குவைத்திற்கு இந்தியாவிலிருந்து நேரடியாக சுகாதரத்துறை அமைச்சகத்தின் கீழ் வேலைக்காக செவிலியர்களை அழைத்துவர முயற்சிகள் எடுத்து வருவதாகவும், மேலும் குவைத் வீட்டுத் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்புக்கு(Recruitment) கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தூதர் விளக்கினார்.
மேலும் குவைத்திற்கு வேலைக்காக வருகின்ற அனைவரும் சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்காக ஆவணங்களை சரிசெய்து, விசா எடுத்து மட்டுமே வர வேண்டும் எனவும், சட்டவிரோதமாக குவைத்தில் வேலைக்காக வருவதால் தான் பலர் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது எனவும், சரியான வழிமுறைகள் பின்பற்றிய வந்தால் மட்டுமே பிரச்சினைகளை சந்திக்கின்ற நேரத்தில் சட்டத்தால் உங்களுக்கு உதவி செய்து காப்பாற்ற முடியும் என்றார். அதேபோல் நிகழ்சியில் கலந்துகொண்ட பல அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் செவியர்கள் பல பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தனர். அதுபோல் குவைத்தில் பிரச்சனைகளை சந்திக்க இந்தியர்கள் யாருடைய உதவியும் இன்றி இந்திய தூதரகம் அறிமுகம் செய்துள்ள 12 வாட்சப் எண்களில் உங்களுடைய தாய்மொழியில் குரல் பதிவு அல்லது வீடியோவாக பதிவு செய்து அனுப்பி அதற்கான தீர்வுகளை உடனடியாக பெற முடியும் எனவும் தூதர் தெரிவித்தார்.