அமீரகத்தில் முகக்கவசத்தில் இருந்து முழுமையாக விடுதலை வெகு தொலைவில் இல்லை;சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
Image : Burj Khalifa
அமீரகத்தில் இனிமுதல் முக்கியமான சில இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்தில் சில குறிப்பிட்ட பிரிவுகளில் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே வீட்டில் உள்ளவர்கள் வாகனங்களில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிய வேண்டியது இல்லை, அதேபோல் பொது இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போதும், கடற்கரைக்குச் செல்லும் மக்களுக்கு முககவசம் தேவையில்லை. அதேபோல் நீச்சல் குளங்களுக்கு செல்பவர்களுக்கும் முகக்கவசம் அணிய தேவையில்லை .மேலும் முகக்கவசம் அணிய தேவையில்லாத பிற இடங்கள் மூடிய அறைக்குள் தனிநபர்கள் இருக்கும் இடங்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் தலை,முகம் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக மருத்துவ மையங்கள் ஆகியவை அடங்கும்.
இது தவிர மற்ற அனைத்து பொது இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முகக்கவசம் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாகும் என்று NCEMA கூறியுள்ளது . ஆணையத்தின் இந்த புதிய முடிவு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. உலகளவில் அதிகமாக மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ள நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். அமீரகத்தில் 92 சதவீதம் மக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியும் 81 சதவீதத்திற்கும் அதிகமாக மக்கள் இரண்டு டோஸ் மேல் முழுமையான தடுப்பூசியையும் பூர்த்தி செய்துள்ளனர். நாட்டில் கடந்த சில வாரங்களாக தினசரி கோவிட் மூலம் பாதிக்கப்படுகின்ற மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றன. இதன் காரணமாக முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.