குவைத்தின் Farwaniya-வில் பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய கள்ளகாதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்
Image : மீட்கப்பட்ட குழந்தை
குவைத்தில் பச்சிளம் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசுவது தொடர்கதை ஆகிறது
குவைத்தின் பர்வானியா பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேபாள நாட்டை சேர்ந்த பெண் மற்றும் அவரது காதலரையும் இவர்களின் கள்ள தொடர்பு மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய குற்றத்திற்காக கையும் களவுமாக பிடித்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமான கர்ப்பம் தரித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பெண்மணியும் கைது செய்யப்பட்ட ஆண் நண்பரும் நேபாள நாட்டை சேர்ந்தவர் ஆவார் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த வழியாக சென்ற பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர் சந்தேகத்திற்கிடமான அந்த இடத்தில் சுற்றிவந்த பெண்ணின் கையில் இருந்த பையில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டநிலையில், அந்த பையினை குப்பை தொட்டியில் வீசியதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக உள்துறை அமைச்சகத்தின் அவசரகால உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தார் என்று அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்தனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அங்குள்ள குப்பை தொட்டியில் குழந்தையை வீசிவிட்டு தப்பிக்க முயன்ற இருவரையும் அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ள தொடர்பு உள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, மேலும் அதிகாரிகள் இவர்கள் வீசிய பையினை திறந்து பார்த்தபோது குழந்தை உயிருடன் இருந்தது இதையடுத்து அவசரகால மருத்துவ குழுவினரை அழைத்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதேபோல் கடந்த வாரம் பிறந்த பச்சிளம் குழந்தையை இறந்த நிலையில் Mushrif பகுதியில் குப்பை தொட்டியில் வீசிய குற்றத்திற்காக இந்தய பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டது யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.