குவைத்திலுள்ள 60-வயது கடந்த இந்தியர்கள் தாயகம் திரும்பினால்,அவர்கள் இந்திய தூதரை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்
Image : இந்திய தூதர் சிபி ஜார்ஜ்
மூத்த இந்திய குடிமக்களை தன்னை சந்தித்த அழைக்கிறேன் என்றும் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்
குவைத்திலிருந்து வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகின்ற 60-வயது கடந்த அனைத்து மூத்த இந்தியர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவிகள்(மனைவி) குவைத்தில் உடன் இருந்தால் அவர்களையும் இந்தியத் தூதர் சிபி ஜார்ஜைச் சந்தித்து அவரது அனுபவங்களை நேரில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து மூத்த இந்திய குடிமக்களை தன்னை சந்திக்க அழைக்கிறேன் என்றும் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் நலனை மேலும் சிறந்த முறையில் மேம்படுத்தவும், அதேபோல் இந்தியா-குவைத் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு மூத்த குடிமக்களால் சிறந்த யோசனைகளை பகிர்ந்து கொள்ள முடியும் என்று நம்புவதாக அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா செல்வதற்கு முன் இந்திய தூதரை சந்திக்க விரும்புபவர்கள் தங்களுடைய தொலைபேசி எண் மற்றும் தாயகம் புறப்படும் தேதி உள்ளிட்ட விவரங்களை socsec.kuwait@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.